5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jackfruit: ஆரோக்கியம் அதிகமாகும்.. பலாப்பழத்தில் கொட்டிக்கிடக்கும் சத்துகள்!

Health Benefits: முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தினை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய பலாப்பழத்தில் உடலுக்கு நன்மை அளிக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதால் ஏராளமானோர் விரும்பி சாப்பிடுகின்றனர்.  மிகவும் இனிப்பு சுவை வாய்ந்ததாக உள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும்  பலாப்பழத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

Jackfruit: ஆரோக்கியம் அதிகமாகும்.. பலாப்பழத்தில் கொட்டிக்கிடக்கும் சத்துகள்!
பலாப்பழம்
intern
Tamil TV9 | Updated On: 19 Jun 2024 08:39 AM

பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்து இருப்பதால் இவை உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவுகிறது. உடலுக்கு பாதுகாப்பு அளித்து வெள்ளை அணுக்களின் அளவை அதிகரிக்கும் தன்மை உடையதாகவும் பலாப்பழம் உள்ளது. பலாபழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் ஆஸ்துமா பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். பலாப்பழத்தில் புற்று நோய்க்கு எதிராக செயல்படும் பைட்டோ நியூட்ரியண்டுகளான ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சாப்போனின்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றன. இவை புற்றுநோய் உருவாகக்கூடிய காரணிகளை எதிர்த்து போராட உதவுகிறது.

Also Read: இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 நடிகைகள்!

பலாப்பழத்தில் பொட்டாசியம் வைட்டமின் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் கே கண்களை பாதுகாத்து ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ள உதவுகிறது.பலாப்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் ஜியாக் சாண்டி நிறைந்து காணப்படுவதால் மேலும் மாலைக்கண் நோய் வருவதை தடுக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்களாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுவாக்க உதவுகிறது. சளி இருமல் போன்ற தொற்று நோய்களுக்கு எதிராக செயல்பட்டு உடலை பாதுகாக்கும் கருவியாகவும் உள்ளது.

பலாப்பழம் சாப்பிடுவதால் இதை ஆரோக்கியம் பயன்படுகிறது இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை இயல்பாக உதவுகிறது சோடியம் அதிகப்படியான செயல்பாடுகளை ஒருங்கிணைத்து புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது.

பலாப்பழம் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை குறைத்து பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது

Aslo Read: Top 10 Actress : இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 தமிழ் நடிகைகள்!

தூக்கமின்மையால் அவதிப்படும் மனிதர்களுக்கு பலாப்பழம் பயனுள்ளதாக உள்ளது இதில் உள்ள மெக்னீசியம் உடலில் உள்ள நரம்பு இயக்கத்தின் அளவை கட்டுப்படுத்தி நரம்புகளை தளர்த்தி தூங்குவதற்கு உதவுகிறது பலாப்பழத்தினை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் ஒருவருடைய சீரற்ற தூங்கும் பழக்கத்தை சரி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

Latest News