5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pregnant Women: கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. டயர் விவரம்!

Health Tips : கர்ப்பிணி பெண் கர்ப்ப காலத்தில் என்ன பொருட்களை எல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து வைத்துக் கொள்வதே சிறந்து. நாம் என்ன சாப்பிடுகிறோம், அதில் உள்ள சத்துக்கள் என்ன என்பதை அறிந்து வைத்துக் கொள்வதும் சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது. இது எந்த பொருட்களை எல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்து காணலாம்.

Pregnant Women: கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. டயர் விவரம்!
கர்ப்பிணி பெண்கள்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 09 Jun 2024 10:01 AM

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான மகிழ்ச்சியான நாட்களாகும். அப்படிப்பட்ட நாட்களில் சிறந்த ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்வது அந்த பெண்ணிற்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நன்மை பயக்கும். உணவு விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது தாய்க்கும் சேர்க்கும் நன்மை பயக்கும். ஆரோக்கியமான உணர்வுகளை தவிர்த்து, கர்ப்பிணிகள் தற்போதைய காலகட்டத்தில் ஃபாஸ்ட் ஃபுட் காலத்தை நோக்கி நகர்கின்றனர். பெரும்பாலும் மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு இது போன்ற உணவுகளை தவிர்க்குமாறு அறிவுரை கூறுகின்றனர். அப்படி கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கக் கூடிய உணவு வகைகளை காணலாம்.

செயற்கை குளிர் பானங்கள்

பெரும்பாலும் கடைகளில் கிடைக்கும் பழச்சாறுகளை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்ப்பது நல்லது. இதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்படாத பேஸ்டுரைஸ் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. வெளியில் கடைகளில் கிடைக்க கூடிய செயற்கையான பழச்சாறுகளில் தீங்கு விளைவிக்கும் அதிகப்படியான பாக்டீரியாக்கள் உள்ளதால் இது தொற்று நோயை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

கர்ப்பிணி பெண்களுக்கு பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் தேவையான ஊட்டச்சத்துக்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இல்லை என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது. இவற்றில் கல்லூரிகள் சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளதால் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிவாரண பிரச்சனைகள் பிரசவத்தின் போது பல சிக்கல்களை ஏற்படுத்தும் புரதம் காய்கறிகள் பழங்கள் போன்ற ஆரோக்கியமான முழு தானிய உணவுகளை உட்கொள்வது சிறந்த நார் சத்துக்கள் கிடைப்பதற்கு வழிவகும் எனவே கர்ப்பிணி பெண்கள் இயற்கை முறையில் ஆன உணவுகளை உட்கொள்வது சிறந்தது.

Also Read: Heart: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிற்றுண்டிகள்:

பதப்படுத்தப்படாத பால்

கொழுப்பு நீக்கப்பட்ட பால் மசாலா மற்றும் பாலிடக்கட்டி போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக உள்ளது. இதில் ஈ கோலை, சால்மோனெல்லா தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உள்ளதால் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இருப்பினும் பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் பொருட்களின் உணவு விஷத்தன்மை உடையதாக உள்ளது.

மெர்குரி மீன்

பெரிய கடல் மீன்கள் அதிக அளவு பாதரசத்தை கொண்டதால் இதனை குறைவான அளவிற்கு உட்கொள்ள வேண்டும் வாரத்திற்கு 180 கிராம் குறைவாக எடுத்துக் சிறந்ததாக உள்ளது சூறை மீன், சுறா மீன், வாள் மீன், கானாங்கெளுத்தி, புள்ளி களவா மீன், சங்கரா மீன் போன்றவை பாலூட்டும் போது இது போன்ற பாதரசம் நிறைந்த மீன்களை தவிர்ப்பது நல்லது. ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திற்காக, சால்மன் இறால் போன்ற உணவுகளை உட்கொள்வது சிறந்ததாக உள்ளது.

Also Read: Agriculture: வேளாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன்12 வரை அவகாசம் நீட்டிப்பு..!

சமைக்கப்படாத இறைச்சி

பொதுவாக சமைக்கப்படாத எந்த உணவுகளையும் கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. பச்சை மீன், மட்டி மீன் போன்றவை பல்வேறு நோய்த்தொற்றுகளை கொண்டுள்ளதால் நோவா வைரஸ் விப்ரியோ சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் நோய் தொற்றுகளை உருவாக்குகிறது. கர்ப்பிணி பெண்கள் குறிப்பாக நோய் தொற்றுக்கு ஆளாவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

முட்டை

பச்சை முட்டைகளில் உள்ள சால்மோனெல்லாவால் பாக்டீரியா நிறைந்துள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் வாந்தி வயிற்றுப்போக்கு குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. முழுமையாக சமைத்த உணவு பொருட்களையும் முட்டைகளையும் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

Latest News