5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Neem: சரும பொலிவு முதல் வைரஸ் காய்ச்சல் வரை … அனைத்திற்கும் ஒரே தீர்வு

Neem Leaves Beifits: நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே நாம் வேப்பிலை சார்ந்த பல பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். வேப்பிலை நோய் நொடியின்றி வாழ்வதற்கு உதவியாக இருந்துள்ளது. நம்முடைய வரும் தலைமுறையினர் வேப்பிலை பற்றி எந்த வித தன்மையையும் அறியாமல் இருக்கின்றனர். கசப்பு என்றாலே குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஒதுக்கி வைக்கிறார்கள். நாள்தோறும் வேப்ப மரத்தின் இலைகளை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கப்படுகின்றன.

Neem: சரும பொலிவு முதல் வைரஸ் காய்ச்சல் வரை … அனைத்திற்கும் ஒரே தீர்வு
வேப்பிலை
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 03 Jul 2024 08:47 AM

வேப்பிலையை நாள்தோறும் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கபடுகின்றன. வேப்பிலை கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக விளங்குகிறது. தலையில் நீர் கோர்த்து தலைவலியால் அவதிபடுபவர்கள் இந்த வேப்பிலை மற்று மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் குணமாகும். வேம்பின் இலை, காய், கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. வேப்பிலை கோழையை அகற்றுகிறது. தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியா போன்ற காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவுமின்றி குணமாகும்.

Also Read: Credit Card : கிரெடிட் கார்டு பில் பேமெண்டில் மாற்றம்.. இனி இதுதான் நடைமுறை!

வேப்பிலையின் பயன்கள்:

  • வேப்பம் பூவை உலர்த்தி, பொடி செய்து, ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரில் போட்டு குடித்தால், வயிற்றுப்புண் குணமாகும்.
  • சர்க்கரை நோயாளிகளின் அருமருந்தாகும் வேப்பிலையின் பயன்கள் அனைவரும் அறிந்தது என்றாலும், தலைமுடிக்கும் ஏராளாமான நன்மையளிக்கிறது.
  • வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், பல உடல்நலக் கோளாறுகள் நீங்கும். ரத்தத்தை சுத்திகரித்து, வயிற்றில் உள்ள கிருமிகள் அழிக்கிறது.
  • வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து, பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் அல்லது நெய்யில் வறுத்து உப்பு கலந்த சாதத்துடன் சாப்பிட்டால், ஏப்பமும், வாந்தியும் நின்று நன்மையளிக்கிறது.
  • வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் தலைக்கு குளித்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் போய்விடும்.
  • வேப்பிலை கண்களின் பார்வை திறனை அதிகரித்து, கண்களில் ஏற்படும் எரிச்சல், சிவந்த கண்கள், தூக்கமின்மை போன்ற கண்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
  • காய்ந்த வேப்ப இலைகளை துாளாக்கி, சாம்பிராணி சேர்த்து புகை போட்டால், வீட்டில் கொசுத் தொல்லை இருக்காது
  • சில பெண்களுக்கு முகத்தில் மீசையை நீக்குவதற்கு வேப்பங் கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் ஆகியவற்றை காய வைத்து, மாவு போல அரைத்து, தினசரி பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.

Also Read: கருவுற்ற பெண்கள் மாம்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும்?