International Yoga Day 2024: உயர் இரத்த அழுத்தம் முதல் மன அழுத்தம் வரை.. அனைத்திற்கு ஒரே தீர்வாய் யோகாசனம்..! - Tamil News | International Yoga Day 2024: From high blood pressure to depression.. yoga is the only solution for everything..! | TV9 Tamil

International Yoga Day 2024: உயர் இரத்த அழுத்தம் முதல் மன அழுத்தம் வரை.. அனைத்திற்கு ஒரே தீர்வாய் யோகாசனம்..!

Yoga Day 2024: சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் யோகாசனம் செய்யலாம். யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம் உள்ளன. நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக யோகாசனம் உள்ளது. இரத்த அழுத்தம் முதல் குடல் ஆரோக்கியம் வரை அனைத்திற்குமான தீர்வாக உள்ள யோகாவின் நன்மைகள் குறித்து காணலாம்.

International Yoga Day 2024: உயர் இரத்த அழுத்தம் முதல் மன அழுத்தம் வரை.. அனைத்திற்கு ஒரே தீர்வாய் யோகாசனம்..!
Updated On: 

20 Jun 2024 23:49 PM

யோகா செய்வது தன்னம்பிக்கையை அதிகரித்து உடலில் மாற்றங்களை வழங்குகிறது. அதே நேரத்தில்  மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும் திறன் யோகாசனத்திற்கு அதிகம் உள்ளது. பழங்காலம் தொட்டே நம்முடைய முன்னோர்கள் யோக பயிற்சிகளை செய்து வருகின்றனர். தற்போது மருத்துவர்களும் யோகா பயிற்சியை மேற்கொள்ள அறிவுறுத்துகின்றனர். யோகா உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்து, மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. யோகா செய்வதன் மூலம் குறைந்த அழுத்த நிலைகள் மாறுபட்டு நிகழ்வு தன்னை அதிகரிக்கிறது. நுரையீரல் திறன் மேம்பட்டு பதட்டத்தை கணிக்கவும் யோகா உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை நோயை குறைப்பது முக்கிய பங்காற்றுகிறது. நாள்பட்ட முதுகு வலியை போக்குவதும் யோகா உதவுகிறது. இதய நோயால் ஏற்படும் அபாயத்தை குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. யோகா செய்வதால் கற்றல் திறன் அதிகரிப்பது உள்ளிட்ட எண்ணற்ற நன்மைகள் உள்ளன.

Also Read: ஆனி மாத பெளர்ணமி: கேட்ட வரம் கிடைக்கும் சிவபெருமான் வழிபாடு..!

மனநிலை மாறுபாடு

யோகா செய்வதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி கவலைகளை மறப்பதற்கான வழியாக உள்ளது. தொடர்ந்து யோகா செய்வதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

மன அழுத்தம்

முறையாக யோகா செய்யும் பொழுது பயிற்சிகள் மட்டுமே கவனம் செலுத்தினால் எண்ணற்ற பலன்களை பெறலாம் உங்களது கவனம் கையில் இருக்கும் முத்திரையுடன் ஒன்றிப்போகும் பொழுது மனம் இலகுவாகிறது இதனால் மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகள் உடலில் இருந்து வெளியேறுகிறது.

ரத்த அழுத்தம்

தினமும் யோக பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்றத்தை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் அமைதியாகவும் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைய வழி வகுக்கிறது.

Also Read:Heatwave Death: மெக்காவில் 68 இந்தியர்கள் உயிரிழப்பு.. ஹஜ் பயணத்தில் பலி எண்ணிக்கை 645 ஆக உயர்வு..!

முதுமை கட்டுப்படுத்துதல்

யோகா செய்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி பிரீ ரேடிக்கல்களை நீக்கவும் உதவுகிறது இது ஏராளமான நன்மைகளைக் கொடுப்பதன் மூலம் வயதான தோற்றத்தையும் குறைக்க உதவுகிறது யோகா மன அழுத்தத்தை நீக்கும், அதே நேரத்தில் மற்றும் வயதானதை குறைக்கும் காரணியாகவும் அமைந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல்

யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கின்றன உடலில் உள்ள ஒவ்வொரு செல்களையும் குணப்படுத்தி மேம்படுத்துகிறது. தினசரி யோகா செய்வதன் மூலம் உடல் தானாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

சமநிலை அதிகரிப்பு

யோகா சமநிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதால் உடலில் மீது முழு கட்டுப்பாட்டையும் பெற அனுமதிக்கிறது யோகாவின் வழக்கமான பயிற்சி வகுப்பில் உள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் சமநிலைப்படுத்துகிறது யோகா வகுப்பிற்கு வெளியேயும் நன்கு கவனம் செலுத்துவதில் உங்கள் திறனை மேம்படுத்த உதவுகிறது.

இரைப்பை ஆரோக்கியம்

யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் சரிமான உறுப்புகள் மேம்படுகின்றன அஜீரணம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படுகின்றன இவை ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் ஆரோக்கியத்தை அளித்து இரைப்பை குடல் மேம்படுத்துகிறது

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!