5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

International Yoga Day: சர்வதேச யோகா தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Yoga Day 2024: சர்வதேச யோகா தினம்: கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினம், ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 -ல் கொண்டாடப்படுகிறது.

International Yoga Day: சர்வதேச யோகா தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
intern
Tamil TV9 | Updated On: 20 Jun 2024 19:28 PM

இந்தியாவில் தோன்றிய யோகா நம்முடைய மனதிற்கும் உடலுக்கும் சிறந்த பயிற்சியாக உள்ளது. ஒரு மனிதன் பிரச்சனையில் இருக்கும் பொழுது யோகா செய்வதன் மூலம் அவருக்கு மன அழுத்தம் குறைகிறது.  2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின் பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச யோகா தினமாக ஜூன் 21 ஆம் தேதியை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்ற ஐக்கிய நாடுகள் சபை 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ஆம் தேதியில் சர்வதேச யோகா தினமாக அங்கீகரித்து. ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோக தினமாக அனுசரிப்பதற்காக எடுக்கப்பட்ட முன்வழிகள் ஐக்கிய நாடுகள் பொது சபையின் 193 உறுப்பினர்கள் யார் இந்த தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டு, இதற்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. சர்வதேச யோகா தினம் அங்கீகரிக்கப்பட்டு பத்தாவது சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.

Also Read: Heatwave Death: மெக்காவில் 68 இந்தியர்கள் உயிரிழப்பு.. ஹஜ் பயணத்தில் பலி எண்ணிக்கை 645 ஆக உயர்வு..!

இந்தியாவைப் பொறுத்தவரை யோகா என்பது பழங்கால முதலே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடல், மனம், ஆன்மீகம் சார்ந்து பயிற்சியாக இவை உள்ளன. தற்போது ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. யோகா செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும், மன ரீதியிலான அழுத்தம் பனைச் சுமை பதற்றம் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் குறைகின்றன இதன் வாயிலாக மனதின் ஆரோக்கியம் அதிகரிக்கப்படுகிறது நினைவாற்றல் போன்றவை அதிகரித்து அமைதியான வாழ்க்கையை வாழ துணை புரிகின்றன. தினசரி வாழ்வில் யோகாவினை பின்பற்றுவது அவசியமாகிறது இவை இதய ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து உடலை சீராக இயக்க உதவுகிறது.

Also Read: சர்க்கரையை தவிர்த்தால் இவ்வளவு நன்மைகளா?

சர்வதேச யோகா தினத்தில் உலகம் முழுவதும் உள்ள யோகா அமைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கலாச்சார நிகழ்வுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்க உள்ளனர். காஷ்மீரில் நடக்கும் யோகா தினத்தல் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். சர்வதேச யோகா தினம் பற்றி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா தினத்தை பற்றிய விழிப்புணர்வுகளும் வழங்கப்படுகிறது.

இன்று விழாவில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து 7000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து உள்ளதாகவும் இதற்கு மாநில அரசு சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த பத்து ஆண்டுகளில் உலக அளவில் யோகாவிற்காக அதிகாரம் கிடைத்துள்ளது. இதுவரையிலும் 23.5 கோடி பேர் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

 

 

Latest News