5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tourist Place: ட்ரெக்கிங் செல்ல ஏதுவாக சேலத்தில் இப்படி ஒரு இடமா..? களைக்கட்ட ஆரம்பிக்கும் சீசன் ..!

பொதுவாக நாம் அனைவரும் பயணம் செய்வதை விரும்புவோம் அப்படி இருக்கையில் சுற்றுலா ட்ராக்கிங் போன்ற மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் மிகவும் ஆர்வத்தோடு காணப்படும் அப்படி சுற்றுலாத் தலங்களில் மிகவும் அறியப்படாமல் விளங்கும் ட்ராக்கிங் செல்வதற்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நாளை மகிழ்ச்சியாக இருப்பதற்கு அனைவரும் பரிந்துரைக்கும் ஆனைவாரி மலையை பற்றி காணலாம்.

Tourist Place: ட்ரெக்கிங் செல்ல ஏதுவாக சேலத்தில் இப்படி ஒரு இடமா..? களைக்கட்ட ஆரம்பிக்கும் சீசன் ..!
ஆணைவாரி முட்டல்
Follow Us
intern
Tamil TV9 | Published: 02 Jul 2024 15:35 PM

சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு கடந்து, மாநிலம் கடந்து சுற்றுலா செல்ல முடியாதவர்கள் தமிழகத்தில் இருக்கும் ஊட்டி,கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சென்று வந்த நிலையில், தற்போது பலரும் சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு பகுதிகளில் சுற்றுலா செல்வதை விரும்புகின்றனர். அதனால் தற்போது குறிப்பாக சேலம் மாவட்டம் சுற்றுலாவில் மிகவும் பிரசித்து பெற்று விளங்குகிறது. இந்த வரிசையில் தற்போது ஆணைவாரி மலையும் இணைந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாண்மையான மக்கள் மலைபிரேதசங்களில் ட்ரெக்கின் போன்றவற்றை விரும்புகின்றனர். சேலம் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Also Read: EPS : ஊழியர் ஓய்வூதிய திட்டம்.. அதிரடி மாற்றத்தை செய்த மத்திய அரசு.. என்ன தெரியுமா?

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தில் கல்வராயன்மலை தொடர்ச்சியில் முட்டல், ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த பகுதியினை இங்குள்ள வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து, இங்கு வருகை தரும் மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். ஆணைவாரி முட்டல் பகுதி பெரிதும் பிரபலம் அடையாத ஓர் அருவி மற்றும் ட்ரெக்கிங் ஏரியாவா இருப்பதால, இங்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஆணைவாரி அருவிக்கு காரில் சுற்றுலா செல்வது மிகவும் ஆபத்தானது. இப்பாதை மேடு, பள்ளம் நிறைந்து காணப்படுவதால், நடந்து செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. சுமார் 2.5 கிமீ தூரம் நடந்துதான் ஆக வேண்டும். இருசக்கர வானத்தில் செல்பவர்கள், அருவிக்கு 300 மீட்டர் வரையிலும் சென்ற பின்னர் நடந்தே செல்லலாம். வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம் வழியாக ஆத்தூர் – சென்னை பைபாஸில் இடதுபுறம் திரும்ப வேண்டும். ஆத்தூர் அருகே கல்லாநத்தம் எனும் கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஆணைவாரி ஏரி உள்ளது. இந்த ஏரியில் 2 கிமீ தூரத்தில் முட்டல் அருவி சென்று விடலாம். செப்டம்பரில் இருந்து ஜனவரி வரை சரியான சீஸன் என்றார்கள். சில நேரங்களில் ஜூலை மாத சின்ன மழையில்கூட அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவுவதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

Also Read: Fruits Washing Tips: பழங்களை சாப்பிடுவதற்கு முன் இதை செய்ய மறக்காதீங்க!

படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில் பூங்கா,மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அருவிக்குக் கீழே அகழி போன்ற இடத்தில் நீச்சல் அடித்து குளித்து விளையாடவும், குழந்தைகளோடு நேரத்தை பொழுதுபோக்கும் இடமாக விளங்குகிறது. அங்குள்ள தெருவோர கடைகளில் பல்வேறு வகையான தின்பண்டங்களும் கிடைக்கின்றன.