ஆனி மாத பெளர்ணமி: கேட்ட வரம் கிடைக்கும் சிவபெருமான் வழிபாடு..! - Tamil News | Aadi month full moon: asked Worship Lord Shiva to get blessings..! | TV9 Tamil

ஆனி மாத பெளர்ணமி: கேட்ட வரம் கிடைக்கும் சிவபெருமான் வழிபாடு..!

பௌர்ணமி என்றாலே மிகவும் சிறப்பான நாளாக உள்ளது. அதுவும் ஆனி மாதம் வரும் பௌர்ணமி என்றால் பல வகையிலும் சிறப்புகள் உண்டு. பௌர்ணமி தினத்தில் சிவபெருமானை வழிபடுவது நன்மை அளிப்பதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி வெள்ளிக்கிழமையில் வருவதால் கூடுதல் சிறப்பாக உள்ளது. நாளைய தினம் பௌர்ணமி வழிபாட்டால் கிடைக்கும் பலன்கள் குறைந்து காணலாம்.

ஆனி மாத பெளர்ணமி: கேட்ட வரம் கிடைக்கும் சிவபெருமான் வழிபாடு..!

முழு நிலவு

Updated On: 

20 Jun 2024 13:42 PM

சிவபெருமான்  கூர்ம அவதாரம் எடுத்த ஆனி மாதம் என்றாலே மிகவும் பிரசித்தி பெற்ற மாதமாக கூறப்படுகிறது. சிவபெருமானுக்கு திருமஞ்சனம் நடப்பதும் இந்த மாதத்தில்தான் எனவே இந்த மாதம் பிரசித்தி பெற்றதாக உள்ளது. ஆனி மாத பௌர்ணமி அன்று நீர் நிலைகளில் நீராடி, விரதமிருந்து வழிபடுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. கோடைகாலம் முடிந்து வசந்த காலத்தின் துவக்கமாக ஆனி மாதம் இருப்பதினால், இந்த மாதத்தில் பல்வேறு நல்ல காரியங்களை மேற்கொள்ள உகந்ததாகவும் கூறப்படுகிறது.  பௌர்ணமி தினத்தில் நாம் என்ன வேண்டுகிறோமோ அதை அப்படியே கடவுள் நமக்கு கொடுப்பார் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். அப்படி இருக்கும் பொழுது சிறப்பு வாய்ந்த இந்த ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் கேட்டு வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Also Read: Gold Price Today: உயர்ந்தது தங்கம் விலை… இன்று நகை வாங்க முடியுமா? நிலவரம் இதுதான்!

பௌர்ணமி நாளன்று திருவண்ணாமலைகள் கிரிவலம் சென்று வருபவர்களை நான் பார்த்திருப்போம். அதைப்போல் நாளைய தினத்தன்று திருவண்ணாமலைகள் நாள் முழுவதும் கிரிவலம் செல்ல ஏற்ற நேரமாக உள்ளது.  அமாவாசை, கிருத்திகை போன்று பௌர்ணமியும் மிகவும் முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. கார்த்திகை, சித்திரை, தை போன்ற மாதங்களில் வரும் பௌர்ணமி நாட்களை திருவிழாவாக கொண்டாடி வருகிறோம். அதேபோல் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமியும் கொண்டாட கூடிய ஒன்றாக தான் உள்ளது. ஆணி  பெளவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து அன்னதான வழங்கி வழிபடுவதன் மூலம் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி தட்சிணாயன காலத்தின் கடைசி மாதமாக இருப்பதால் இந்த மாதத்தில் வரும் பௌர்ணமியில்  சிவபெருமான் மட்டுமில்லாமல் துர்க்கை, விநாயகரையும் வழிபடுகின்றனர். ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி மூல நட்சத்திரத்தில் வந்துள்ளதால் இந்த பௌர்ணமி நாள் என்று சிவபெருமானோடு சேர்த்து அனுமனையும் வழிபடுவது சிறப்பானதாக உள்ளது. வீட்டில் ஆறு மணிக்கு மேல் விளக்கு ஏற்றி பௌர்ணமி பூஜை செய்வது போல் சுக்கிரனுக்கு உகந்ததாக உள்ளது.

Also Read: விதார்த்தின் ‘லாந்தர்’ படத்தின் ட்ரெய்லர் இதோ!

ஜூன் மாதம் 21 ஆம் தேதி ஆணி பௌர்ணமி திதி நேரம் 21. 06. 2024 வெள்ளிக்கிழமை காலை 7. 16 முதல் அடுத்த நாள் 22. 06. 2024சனிக்கிழமை காலை 7: 29 மணி வரையிலும் இருக்கிறது.

பௌர்ணமி தினத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தருகிறது. அம்மன் வழிபாடு செய்யும் பொழுது நூற்றுக்கெட்டு முறை மந்திரங்களை கூறி மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு செய்வது தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை பெறுவதாக கூறப்படுகிறது.

நினைத்த காரியத்தில் வெற்றி கிட்ட வேண்டும் என்பவர்கள் சத்யநாராயண பூஜையை வீடுகளில் செய்து வருகின்றனர் இந்த பூஜையினால் மகாலட்சுமி அருள் கிடைக்கின்றது.

எல்லா பௌர்ணமியும் சிறப்பு வாய்ந்த பௌர்ணமிகள் என்ற போதிலும் நம் வினைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப குறிப்பிடத்தினர்கள் வரும் பௌர்ணமியை வழிபாடு செய்வதன் மூலம் 16 பெயர்களும் கிடைக்கின்றன

 

(இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!