5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pratosham: பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள் குறித்து தெரியுமா?

பிரதோஷம் என்பது இந்து மக்களால் கடைபிடிக்கக் கூடிய ஒரு விரத முறையாகும். இந்த விரதம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு நாட்களில் வருகின்ற திரையோதசித் திதியில் சூரியன் மறைவுக்கு முன் மற்றும் பின் நிகழும் உள்ள நேரத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரத காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பானதாக கூறப்படுகிறது.

Pratosham: பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள் குறித்து தெரியுமா?
பிரதோஷம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 06 Jun 2024 20:53 PM

புராணக் கதைகளில் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடையும் பொழுது ஆலகால விஷத்தை வாசுகி பாம்பு வெளிப்படுத்தியது. இதனைக் கண்டு பயந்த தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானை தங்களை காக்கும் படி வழிபாடு நடத்தி உள்ளன. இதனால் ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொண்டதாக கூறப்படுகிறது. சிவபெருமான் உட்கொண்ட விஷம் வயிற்றினை அடையாமல் இருக்க பார்வதி சிவபெருமான் கழுத்தினை இருக்க பிடித்தார். அப்போது முதல் சிவபெருமான் கழுத்தில் பெருமையாக மாறியது என்ற புராண கதைகள் கூறுகின்றன. மூவுலகிற்கும் ஏற்பட இருந்த மிகப்பெரிய பேரழிவை சிவபெருமான் காத்த அந்த நேரத்தை பிரதோஷ நேரமாக கருதி விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: PM Modi : ஜூன் 9ம் தேதி பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி.. ஏற்பாடுகள் தீவிரம்!

தினசரி பிரதோஷம் மாத பிரதோஷம் நட்சத்திர பிரதோஷம் பூரண பிரதோஷம் மகா பிரதோஷம் என பிரதோஷம் பிரதோஷம் மொத்தம் 20 வகையாக கூறப்படுகிறது. பிரதோஷ காலத்தில் ஒருவர் செய்த பாவங்களை தீர்த்து மோட்சத்தை அடைய செய்யப்படும் வழிபாடு முறையாக கூறப்படுகிறது அதாவது பிரதி+தோஷம் என்ற இரண்டு வார்த்தைகளையும் கொண்டது. . பிரதி என்பது ஒவ்வொன்றும் எனவும், தோஷம் என்பது பாபத்தையும் குறிக்கும். ஆகவே பிரதோஷம் என்பது ஒவ்வொரு பாவத்தையும் போக்கும் வழிபாடாக இறைநம்பிக்கை உள்ள மக்கள் கருதுகின்றனர்.

மாதந்தோறும் வரும் பிரதோஷத்தை காட்டிலும் சித்திரை, வைகாசி, ஐப்பசி கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனி பிரதோஷ நாட்களை மிகவும் பிரசித்தி பெற்ற நாட்களாக கருதி அன்றைய தினம் விரதம் மேற்கொள்வர். பிரதோஷ நேரம் குறிப்பாக மாலை 4:30 மணிக்கு மேல் இரவு 7 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.

Also Read: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் சூப்பர் ஹிட் படம்!

நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர் வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணக்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும். இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர். அதே பிரதோச நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகமாக உள்ளது.

 

Latest News