5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Friday Fasting: வெள்ளிக்கிழமை வழிபாடு லட்சுமியை வணங்கினால் இவ்வளவு நன்மைகளா..!

நினைத்த காரியங்களை நிறைவேற்றவும், மனதிற்கு நிம்மதி கிடைக்கவும், எல்லா செல்வங்களும், பொருளாதார நிலையும் உயர இறைவனை நினைத்து உணவு, மனநிலை போன்றவற்றை ஒருநிலைப்படுத்தி இருப்பதே விரதம் முறையாகும். விரதம் என்பது நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Friday Fasting: வெள்ளிக்கிழமை வழிபாடு லட்சுமியை வணங்கினால் இவ்வளவு நன்மைகளா..!
லட்சுமி
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 28 Jun 2024 00:26 AM

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. செல்வங்களை அள்ளி தரும் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளாக உள்ளதால், பொதுவாக வெள்ளிக்கிழமையில் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் செல்வ வளத்தை அள்ளித் தரக் கூடியதாக உள்ளது. வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமியின் அருள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். மேலும் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் இணைந்து பெறுவதாக கூறப்படுகிறது. ஒரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை அல்லது கடைசி வெள்ளிக்கிழமையில் ஆரம்பித்து, பதினொரு வாரம் வரையிலும் கடைபிடிக்க வேண்டும். ஒருவரின் வயதைப் பொறுத்து தனது வாழ்நாள் முழுவதும் கூட இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

Also Read: கவனம் மக்களே… பெர்த் அறுந்து விழுந்து உயிரிழந்த பயணி.. காரணத்தை சொன்ன ரயில்வே நிர்வாகம்!

பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது. வாரத்தில் இருக்கும் 6 நாட்களில், வீட்டில் விளக்கு ஏற்றாவிட்டாலும், இந்த வெள்ளிக்கிழமையில் மட்டும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பான வாழ்க்கையை தருகிறது.

வாரத்தின் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொரு நாளில் விரதம் இருந்து வழிபட்டால் ஒவ்வொரு பலன் கிடைக்கும். செல்வம் என்றதும் அனைவரும் பணம், பொருள் என்று தான் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதை விட முக்கியமானது நிம்மதி, மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், ஞானம் போன்றவைகள் தான். ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் தீரும். திங்கட்கிழமை சிவனையும், செவ்வாய் கிழமை முருகனையும், புதன்கிழமை விநாயகரையும், வியாழக்கிழமை குருமார்களையும், வெள்ளிக்கிழமை அம்மனையும், சனிக்கிழமை பெருமாளையும், ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானையும் வழிபட வாழ்வில் பலவிதமான பிரச்சனைகள் விலகும் என்று நம்பப்படுகிறது.

Also Read: WiFi Calling : நெட்வொர்க் இல்லாதபோதும் போன் செய்யலாம்.. WIFI அழைப்பு குறித்து தெரியுமா?

வெள்ளிக் கிழமை மாலை வேளையில் வீடை சுத்தம் செய்து சாம்பிராணி போட வேண்டும். அதனால் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் விலகி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும். வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிப்பது தவிர்க்க வேண்டும். அதிலும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடிப்பது கூடவே கூடாது. வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடித்தால் மகாலட்சுமியை விரட்டி அடிப்பதற்கு சமம். எனவே வியாழக்கிழமைகளில் ஒட்டடை அடித்து வீடு துடைப்பது நல்லது. வெள்ளிக்கிழமையன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். அதே நேரத்தில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது அது வறுமையை ஏற்படுத்தும். வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் நேரத்தில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது சிறப்பு.

 

Latest News