5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பணவரவு அதிகரிக்க இந்த திசையில் விளக்கேற்றுங்க!

நமது வீடுகளில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விளக்கு வைத்து வழிபடுவதை நாம் பார்த்திருப்போம். விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது குடும்பத்திற்கு நன்மைகளை அழிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. எந்த திசையில் விளக்கு வைத்து எப்படி வழிபடுவது என்பது குறித்து காண்போம்.

பணவரவு அதிகரிக்க இந்த திசையில் விளக்கேற்றுங்க!
குத்து விளக்கு
intern
Tamil TV9 | Updated On: 22 Jun 2024 13:32 PM

விளக்குகளை கிழக்கு திசைகள் ஏற்றி வழிபடுவது சிறப்பான பயன்களை தருகிறது. இறந்தவர்களின் படத்திற்கு விளக்கு ஏற்றும் பொழுது வடக்கு திசைகள் இயற்றி வழிபட வேண்டும் மற்ற நேரங்களில் விளக்கின் திசையை மாற்றக்கூடாது கிழக்கு நோக்கி வைத்திருப்பதை அவசியம் சில விசேஷ நாட்களில் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பானதாக அமைகிறது. குத்துவிளக்கு அடியில் எந்த பொருட்களையும் வைக்காமல் நேரடியாக தரையில் வைத்து ஐந்து முகங்களிலும் தெரிவித்து விளக்கு ஏற்றி வழிபடுவது குடும்பத்திற்கு நல்ல பலன்களை தருகிறது.

விளக்கு ஏற்றுவதற்கு நெய், எண்ணெய்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணைகள் விளக்கு ஏற்றும் பொழுது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியம் கிடைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. நெய் வைத்து விளக்கு ஏற்றும் பொழுது செல்வ வளம் அதிகரிக்கிறது. விளக்கெண்ணங்கள் விளக்கு ஏற்றும் பொழுது புகழ் அதிகரித்து காணப்படுகிறது. வேப்ப எண்ணெய் விளக்கு ஏற்றும் பொழுது தம்பதிகளில் ஒற்றுமை அதிகரித்து காணப்படுகிறது. கடலை எண்ணெயில் விளக்கு ஏற்றக்கூடாது என்ற சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Also Read: Horoscope Today: ஜூன் 22 2024 ராசிபலன்.. சகாக்களின் ஆதரவு, தொலைதூரப் பயணம்

செவ்வாய் வெள்ளி போன்ற கிழமைகளை தவிர மற்ற நாட்களில் விளக்கை சுத்தம் செய்யலாம் . அன்றைய தினங்களில் விளக்கை சுத்தம் செய்யக்கூடாது. அதில் உள்ள எண்ணெயை கீழே ஊற்றி விட்டு, வேறு எண்ணெயை  புதிய திரியிட்டு வைத்து வழிபட வேண்டும்.

விளக்கு ஏற்றுவதற்கு காலை 5 மணி முதல் 7:00 மணி வரை சரியான நேரமாக உள்ளது. சூரிய உதயத்திற்கு முன் நம்முடைய வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது சகல சௌபாக்கியங்களும் கிடைக்கிறது. அந்தி மாலை நேரத்தில் மாலை 5 மணி முதல் 7:00 மணி வரை விளக்கு ஏற்றுவது நன்மையை அளிக்கிறது. நாம் ஏற்றும் விளக்கு கிழக்கு நோக்கி அமைந்திருப்பதும் விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசையை பார்த்தபடி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

விளக்கு ஏற்றும் பொழுது உடனடியாக தீயை அணைக்க கூடாது. அரை மணி நேரமாவது விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். பூஜை முறையில் வைத்து வழிபட்ட தீபத்தை மறுபடியும் வெளியில் கொண்டு சென்று வழிபடக்கூடாது இன்னொரு விளக்கை ஏற்றுதலும் கூடாது. விளக்கு ஏற்றுவதனால் கிடைக்கும் முழு பலன்களையும் பெற வேண்டும் என்றால் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Also Read: சோனியா அகர்வாலின் ‘7ஜி’ பட ட்ரெய்லர் இதோ!

விளக்கு ஏற்றும் பொழுது சில தவறுகளை செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த சமயத்தில் அனைத்து கடவுள்களும் மகிழ்ச்சி அடைவதாக கூறப்படுகிறது. வீட்டில் விளக்கு வைத்த பிறகு பால் தயிர் போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. தலைமுடியை விரித்து போடக்கூடாது வீட்டு நிலை வாசலில் அமர்ந்து பேன் பார்ப்பது போன்ற சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் நிறைய நன்மைகளை பெறலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் வாஸ்து நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News