Karthigai Amavasai: கார்த்திகை அமாவாசையில் இந்த இடத்தில் நீராடினால் புண்ணியம்!
Kumbakonam: ஆண்டு தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருகிலுள்ள மடத்தில் இருக்கும் கிணற்றில் புனித நீராடி இறைவழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
கார்த்திகை அமாவாசை: முன்னோர்களை வழிபட அமாவாசை உகந்த நாள் ஆகும். அப்படிப்பட்ட இந்த நாளில் நாம் கோயில்களில் சென்று வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படியான நிலையில் கார்த்திகை மாத அமாவாசையில் நாம் வணங்க வேண்டிய கோயில்களில் மிக முக்கியமானது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ள யோகநந்தீஸ்வரர் ஆலயம் ஆகும். இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருகிலுள்ள மடத்தில் இருக்கும் கிணற்றில் புனித நீராடி இறைவழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் பற்றி தெரிந்து கொள்ளலாம். நடப்பாண்டு கார்த்திகை மாதம் அமாவாசை நவம்பர் 30 ஆம் தேதி காலை 11.04க்கு தொடங்கி டிசம்பர் 1 ஆம் தேதி நண்பகல் 12.19க்கு முடிவடைகிறது.
Also Read: Lord Murugan: முருகனுக்கு மாலை அணிபவர்கள்.. பின்பற்ற வேண்டிய விரத முறைகள்!
கோயில் சிறப்பு
தேவார பாடல் பாடப்பெற்ற தலங்களில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 43 வது திருத்தலம் இந்த கோயிலாகும். யோகநந்தீஸ்வரர் தாயார் சௌந்தரநாயகியுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இக்கோயிலில் தலவிருட்சமாக வில்வ மரமும், எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளது. மேலும் சிறந்த சிவ பக்தராக போற்றப்பட்ட அய்யாவாள் என அழைக்கப்பட்ட ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் அவதரித்த தலம் இந்த கோயிலாகும். இந்த யோக நந்தீஸ்வரர் கோயில் கும்பகோணத்திற்கு கிழக்கு திருவிடைமருதூர் வேப்பத்தூர் சாலையில் 4 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த தளம் அமைந்துள்ள ஊரை திருவிசநல்லூர் என அழைக்கின்றனர்.
கார்த்திகை அமாவாசையுடன் நீராட காரணம் என்ன
ஸ்ரீ தர வெங்கடேச தீட்சிதர் அமாவாசை அன்று உணவளிப்பதற்காக அந்தணர்களை எதிர்பார்த்து தன் வீட்டு வாசலில் ஒரு நாள் காத்திருந்தார். அப்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அவர் வீட்டு வாசலில் வந்து பசியால் துடிப்பதாகவும் உணவு தருமாறும் வேண்டினார். உடனே அந்தணர்கள் உண்பதற்காக செய்யப்பட்டிருந்த உணவை அந்த நபருக்கு வெங்கடேச தீட்சிதர் வழங்கி மகிழ்ந்தார். ஆனால் இதனைக் கண்டு அந்த கிராமத்தில் வசிக்கும் அந்தணர்கள் கோபமடைந்தனர். மேலும் வெங்கடேச தீட்சிதரை பார்த்து நீ தூய்மையானவன் என்பதை நிரூபித்தால் இங்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும். அப்படி தூய்மையானவன் என நிரூபிக்க விரும்பினால் கங்கை நதியை உடனே இங்கு வரவழைத்து அதில் நீராட வேண்டும். இதுதான் பரிகாரம் என தெரிவித்துள்ளனர்.
Also Read: Sabarimala: வீட்டிலேயே ஐயப்ப பக்தர்கள் கன்னிப்பூஜை எப்படி நடத்தலாம்?
அதே சங்கம் வெங்கடேச தீச்சிடர கடவுள் முன் அனைவரும் சமம் என்பதில் கொள்கை உடையவர். அந்தணர் சொல்லியதன் பேரில் கடவுளை மனம் உருகி வெங்கடேச தீட்சிதர் வணங்க அவர் வீட்டு கிணற்றில் கங்கு நீர் கொப்பளித்தது. இதனால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து அந்த திருமுழுக்கல் தங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் மூலம் அவரின் மகிமையை அந்தணர்கள் அறிந்து தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். இப்போதும் அந்த ஊரில் உள்ள வெங்கடேச பீச்சகர் மடத்தில் உள்ள கிணற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி அருகில் உள்ள யோகநந்தீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதனால் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் வரும் அமாவாசை நாளில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இந்த மரத்துக்கு வருகை தந்து காத்திருந்து புனித நீராடி செல்கின்றனர். அதற்கு முன்னதாக அருகில் உள்ள காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வும், அப்படி செய்ய முடியாதவர்கள் இதை போட்டு அரிசி காய்கறி பழங்கள் மலர்கள் தேங்காய் ஆகியவை வைத்து வழிபாடு செய்த பிறகும் இந்த மரத்துக்கு சென்று நீராடி செல்கின்றனர். கிணற்றிலிருந்து வரும் நீரை ஏராளமான தன்னார்வலர்கள் நான்கு புறமும் வாலிகளில் இரைத்து பக்தர்கள் மேல் ஊற்றுகின்றனர்.
இந்த நாளில் மடத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் விக்கிரகத்திற்கு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. மேலும் அன்றைய நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. இந்த மடமானது கும்பகோணத்திலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் யோகநந்தீஸ்வரர் கோயில் அருகில் அமைந்துள்ளது