Sabarimala: சபரிமலை தெரியும்.. ஐயப்பனின் அறுபடை கோயில்கள் பற்றி தெரியுமா?
Ayyappan Temple: முருகனுக்கு எப்படி தமிழ்நாட்டில் அறுபடை கோயில்கள் இருக்கிறதோ, அதேபோல் ஐயப்பனுக்கும் கேரளாவில் அறுபடை கோயில்கள் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் முதன்மையானதாக சபரிமலை திகழும் நிலையில் ஐயப்ப பக்தர்கள் முதலில் 5 கோயிலுக்கு சென்று விட்டு தான் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
சபரிமலை: கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக நேற்று (நவம்பர் 15) திறக்கப்பட்டது. சரண கோஷத்தால் சபரிமலையே அதிரும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முருகனுக்கு, ஐயப்பனுக்கும் விசேஷமான மாதமாகும். அப்படியிருக்கும் நிலையில் முருகனுக்கு எப்படி தமிழ்நாட்டில் அறுபடை கோயில்கள் இருக்கிறதோ, அதேபோல் ஐயப்பனுக்கும் கேரளாவில் அறுபடை கோயில்கள் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் முதன்மையானதாக சபரிமலை திகழும் நிலையில் ஐயப்ப பக்தர்கள் முதலில் 5 கோயிலுக்கு சென்று விட்டு தான் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அந்த அறுபடை ஐயப்பன் கோயில் பற்றி காணலாம்.
ஆரியங்காவு
தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது ஆரியங்காவு. தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஊரில் ஐயப்பன் அரசராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அவருடன் புஷ்கலை தேவியும் இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. சாஸ்தாவான ஐயப்பன் திருமணம் செய்யும் காட்சி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும். இங்கு மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் இறைவன் அமர்ந்த கோலத்தில் ஐயப்பன் காட்சி தருகிறார். இதனால் மதகஜ வாகன ரூபன் என்ற பெயர் ஐயப்பனுக்கு ஏற்பட்டது.
Also Read: sabarimala: சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
அச்சன்கோவில்
கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு செல்லும் வழி மிகவும் ஆபத்தானது. யானைகள் அடிக்கடி வலம் வரும் இந்த அச்சன்கோவில் மலைப்பகுதியில் ஐயப்பனை காண செல்வது மிகுந்த பாக்கியமாக கருதப்படுகிறது. செங்கோட்டையிலிருந்து சரியாக 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயம் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட து. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்ரகம் பழமை மாறாமல் இன்றும் காட்சியளிக்கிறது. ஒரு கையில் அமுதம், மற்றொரு காந்தமலை வாள் ஏந்திய திருக்கோலத்தில் ஐயப்பன் இருபுறமும் பூரண புஷ்கலை தேவியருடன் காட்சி தருகிறார். இவரை கல்யாண சாஸ்தா எனவும் அழைக்கிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் இந்த அச்சன்கோவில் ஐயனை வணங்கினால் பலனை பெறலாம்.
குளத்துப்புழா
கேரளாவில் குளத்துப்புழா என்ற இடத்தில் காட்சி தரும் ஐயப்பன் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார். இதனால் அவர் பால சாஸ்தா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். கருவறை சிறுவர்கள் நுழையும் வகையிலான உயரத்திலேயே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும். இக்கோயிலில் விஜயதசமி என்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்படுகிறது. குழந்தைகள் வரம் வேண்டுவோர் இந்த கோயிலுக்கு வந்து வழிபடலாம்.
Also Read: பெரிய வழி vs சிறிய வழி .. ஐயப்பனை காண எது சிறந்தது?
எருமேலி
எருமையை தலையை கொண்ட மகிஷியை ஐயப்பன் வதம் செய்த இடம் எருமேலி கோயிலாக விளங்குகிறது. எருமைக்கொல்லி என்று முதலில் அழைக்கப்பட்ட இந்த இடம் நாளடைவில் எருமேலி என மருவியது. மகிழ்ச்சியை வதம் செய்த மணிகண்டனான ஐயப்பன் அவளது உடல் மீது நடனம் ஆடியதன் நினைவாகவே பக்தர்கள் எருமேலி வந்து பேட்டை துள்ளி சபரிமலை பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆலயத்தின் அருகிலேயே வாபரின் பள்ளிவாசல் உள்ளது. இங்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பந்தளம்
பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கருதப்படும் அரண்மனை இருக்கும் இடம் ஆகும். இங்கு பந்தள மன்னன் ராஜசேகரனால் கட்டப்பட்ட ஆலயம் ஒன்று இன்றும் இருக்கிறது. இந்த கோவில் அச்சன்கோவில் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள நிலையில் சபரிமலை ஐயப்பனுக்கு மகர விளக்கு பூஜையின் போது அணிவிக்கப்படும் திருநகைகள் அனைத்தும் இங்குதான் வைக்கப்பட்டிருந்து எடுத்துச் சொல்லப்படும் செங்கனூர் ரயில் நிலையத்தின் அருகில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது.
சபரிமலை
சபரிமலை கேரளாவில் பத்தினம் திட்டா மலைப்பகுதியில் அமைந்துள்ள கோயிலில் தான் தர்மசாஸ்தா எனப்படும் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். அவர் யோக சின் முத்திரையுடன் குத்துக்காலிட்டபடி காட்சி கொடுக்கிறார். 18 படிகள் ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம் தான். ஐயப்பனின் சன்னதி வாசலில் தத்துவமஸி என்ற எழுதப்பட்டிருக்கும். அதாவது நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய் என்பது பொருள். அதன்படி முறையாக விரதங்களை மேற்கொண்டால் நீயும் கடவுளே என்பதே அர்த்தமாகும்.