“பள்ளிக்கட்டு சபரிமலைக்கு” பாடல் உருவான விதம் தெரியுமா? – பிரமிக்க வைக்கும் தகவல்கள்!

Pallikattu Sabarimalaikku: 1969ல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். தமிழ்நாட்டில் அய்யப்பனை பற்றி நிறைய பேருக்கு தெரியாது. மலையாளம் தவிர தென்னிந்திய மொழிகளில் ஐயப்பனை பற்றி தெரியாது. ஜேசுதாஸ் தான் தன்னுடைய மலையாள பாட்டில் “ஸ்ரீகோயில் நடை திறந்ததுன்னோ” என்ற வரி உண்டு. அதுதான் சபரிமலை பிரபலமாக காரணமானது.

“பள்ளிக்கட்டு சபரிமலைக்கு” பாடல் உருவான விதம் தெரியுமா? - பிரமிக்க வைக்கும் தகவல்கள்!

கோப்பு புகைப்படம்

Published: 

17 Nov 2024 12:18 PM

பாடல் உருவான விதம்: பள்ளிக்கட்டு சபரிமலை பாடல் உருவாகி 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதன் வரலாறு என்பது இன்றைக்கு கேட்டாலும் பிரமிப்பை உண்டாக்கும். அதனைப் பற்றி அப்பாடலுக்கு சொந்தக்காரரும், தனது காந்த குரலால் ஐயப்பனை கண் முன்னே நிறுத்தும் பாடகர் வீரமணி ராஜூ நேர்காணலில் ஒன்றில் தெரிவித்திருப்பார். அதனைப் பற்றி நாம் காணலாம்.  நமக்கு எப்படி ஜன கன மண என்பது தேசிய கீதமோ, அதேபோல் ஐயப்ப பக்தர்களுக்கு பள்ளிக்கட்டு சபரிமலை பாடல் தேசிய கீதமாகும். 1969 ஆம் ஆண்டு தான் இந்த பாடல் உருவானது. அந்த காலத்தில் ஏவிஎம் நிறுவனம் சார்பில் சரஸ்வதி ஸ்டோர் என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

அங்கு ஆன்மீகம் பாடல் பாடுபவர்கள் எல்லாம் உறுப்பினர்களாக இருந்தனர். அதில் தான் என்னுடைய சித்தப்பா வீரமணியும் பாடகராக இருந்தார். 1969ல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். தமிழ்நாட்டில் அய்யப்பனை பற்றி நிறைய பேருக்கு தெரியாது. மலையாளம் தவிர தென்னிந்திய மொழிகளில் ஐயப்பனை பற்றி தெரியாது. ஜேசுதாஸ் தான் தன்னுடைய மலையாள பாட்டில் “ஸ்ரீகோயில் நடை திறந்ததுன்னோ” என்ற வரி உண்டு. அது என்னடா ஸ்ரீகோயில் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

Also Read: Sabarimala: சபரிமலைக்கு முன் பக்தர்கள் செல்ல வேண்டிய சாஸ்தா கோயில்!

சரஸ்வதி ஸ்டோரில் தான் கண்ணன் என்பவர் மேனேஜராக இருந்தார். அவர் தான் ஒவ்வொரு பக்தி பாடல்கள் பாடவும் பாடகர்களை தேர்வு செய்வார். அப்படித்தான் எங்க சித்தப்பா வீரமணியை தேடியும் ஒருநாள் இரவு வந்தார். “ஐயப்பன் சாமி சொல்றாங்களே.. ரொம்ப பேமஸா இருக்கு.. சபரிமலைன்னு நிறைய பேர் போறாங்களே” என கேட்டார். அவர் எதுவும் தெரியாமல் கேட்டார். பள்ளிக்கட்டு சபரிமலை பாடலை எழுதிய என்னுடைய தந்தை 1968ல் இருந்து ஐயப்பன் கோயில் சென்று வருகிறார்.

பாடல் உருவான விதம்

இந்த பாடல் ஐயப்பனுக்கு ஒரு டிக்ஸனரி மாதிரி இருக்கனும் தான் ஆரம்பிச்சாங்க. வீட்டில் வாசலில் உட்கார்ந்து கொண்டு இரவு 9.30 மணிக்கு பாடல் எழுத தொடங்கினார்கள். அதிகாலை 3 மணிக்கு முடித்தார்கள்.

அப்போது எனது அப்பா, “பள்ளிக் கட்டு சபரிமலைக்கு.. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை.. சாமியே ஐயப்போ…சாமி சரணம் ஐயப்ப சரணம்!” என சொல்லிக்கிட்டு போவாங்க என சொல்லவும் கண்ணன் இதையே நாம் பல்லவியாக வைக்கலாம் என சொன்னார்.

சபரிமலைக்கு போகும் பயணம் பற்றி சொல்லலாம் என அடுத்தடுத்து இந்த பாடலில் வரிகள் வந்தது. அடுத்ததாக சபரிமலையில் என்ன நடக்கும் என்பது, “நெய் அபிஷேகம் சாமிக்கே.. கற்பூர தீபம் சாமிக்கே.. ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார்..சபரி மலைக்கு சென்றிடுவார்” என வரி உண்டானது.

விரதம் இருப்பது, “கார்த்திகை மாதம் மாலை அணிந்து..நேர்த்தியாகவே விரதம் இருந்து.. பார்த்த சாரதியின் மைந்தனே..உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து” என தெரிவிக்கப்பட்டிருக்கும்.

பயணப்பாதை விவரம்

பயணத்தின் தொடக்கமாக, “இருமுடி எடுத்து எருமேலி வந்து.. ஒரு மனதாகி பேட்டைத் துள்ளி.. அருமை நண்பராம் வாவரை தொழுது.. ஐயனின் அருள் மலை ஏறிடுவார்” என பெருவழியை குறிக்கும் பயணப்பாதை தொடங்கும்.

இதனைத் தொடர்ந்து முக்கிய இடங்களை சொல்லும்போது,
“அழுதை ஏற்றம்” ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
“கரிமலை ஏற்றம்” கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
“கரிமலை இறக்கம்” வந்தவுடனே திருநதி பம்பையை கண்டிடுவார்” என பெருவழிப்பாதை குறிப்புகள் இருக்கும்.

Also Read: Sabarimala: சபரிமலை தெரியும்.. ஐயப்பனின் அறுபடை கோயில்கள் பற்றி தெரியுமா?

சிறுவழிப்பாதை விவரம்

சிறுவழியை பயன்படுத்துபவர்களுக்கு என சில வரிகள் இடம் பெற்றிருக்கும்.

கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார் என ஆரம்பத்தை குறிப்பிட்டிருப்பார்கள்.

பம்பையை தாண்டி நீலிமலை ஏற்றம் வரும். அதை, “நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்..
காலமெல்லாம் நமக்கே அருட்காவலனாய் இருப்பார்” . இது மிகவும் கடினமான பாதையாகும். அதனால் தான் தேகம் பலம் தா.. பாதம் பலம் தா.. என வரிகள் இருக்கும்.

இதனைத் தொடர்ந்து,
சபரி பீடமே வந்திடுவார் சபரிஅன்னையை பணிந்திடுவார்..
சரங்குத்தியாளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்”
என கன்னிசாமிகள் கொண்டு வரும் சரங்குத்திகளை பற்றி சொல்லியிருப்பார்கள்.

சரங்குத்தி தாண்டியதும் 18 படிகள் வந்து விடும். அதனை. “சபரி மலைதனில் நெருங்கிடுவார்..பதினெட்டு படி மீது ஏறிடுவார்..கதியென்று அவனை சரணடைவார்.. மதிமுகம் கண்டே மயங்கிடுவார். ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்” என வரிகள் இருக்கும் என வீரமணி ராஜூ தெரிவித்திருப்பார்.

தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் என்னாகும்?
30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..?
பெற்றோரிடம் குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சரியானதா? - அறிய டிப்ஸ் இதோ!