வசூலை அள்ளிய பழனி ஆண்டவர் கோயில்.. விடுமுறை நாட்களில் மட்டும் ரூ. 5 கோடி காணிக்கை.. - Tamil News | tamil nadu palani murugan temple hundi collection crossed rupees 5 crores know more in detail in tamil | TV9 Tamil

வசூலை அள்ளிய பழனி ஆண்டவர் கோயில்.. விடுமுறை நாட்களில் மட்டும் ரூ. 5 கோடி காணிக்கை..

Published: 

14 Sep 2024 14:05 PM

பழனி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களான கார்த்திகை, சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். பக்தர்கள் கூட்டமும் அலைமோதும். பழனி ஆண்டவர் கோயிலில் தரிசனம் செய்தால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். அதேபோல் வேண்டுதல் நிறைவேறிய பின் பால் குடம், முடி காணிக்கை, காவடி என பல்வேறு நேர்த்திக்கடன்கள் மேற்கொள்ளப்படும்.

வசூலை அள்ளிய பழனி ஆண்டவர் கோயில்.. விடுமுறை நாட்களில் மட்டும் ரூ. 5 கோடி காணிக்கை..

கோப்பு புகைப்படம் (getty images )

Follow Us On

பழனிக்கோயில் உண்டியல்கள்  விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து கடந்த இருநாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கை வரவு ரூ.5.64 கோடியை தாண்டியதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ( 39 நாட்களில்) உண்டியல் காணிக்கை  ரூ.3.30 கோடியை தாண்டியது. தொடர்ந்து இன்றும் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் அமைந்திருக்கும் முருகப்பெருமானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

பழனி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களான கார்த்திகை, சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். பக்தர்கள் கூட்டமும் அலைமோதும். பழனி ஆண்டவர் கோயிலில் தரிசனம் செய்தால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். அதேபோல் வேண்டுதல் நிறைவேறிய பின் பால் குடம், முடி காணிக்கை, காவடி என பல்வேறு நேர்த்திக்கடன்கள் மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க: மண்டையை பொளக்கும் வெயில்.. 2 நாட்களுக்கு அதிகரித்து காணப்படும் வெப்பநிலை..

அதேபோல் பழனி ஆண்டவரை தரிசிக்க வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்துவதுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் பகுதியில் வைக்கப்பட்ட உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

சென்ற மாதம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் முத்தமிழ் முருகர் மாநாடு, விநாயகர் சதுர்த்தி தொடர்விடுமுறை காரணமாக வந்திருந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 39 நாட்களில் உண்டியல் நிரம்பியது.  இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் முதல் நாள்  எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஒரு 3 கோடியே 32 இலட்சத்து 50 ஆயிரத்து 873 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மேலும் படிக்க: தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்.. வலுக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்..

தங்கம் 1,237 கிராமும், வெள்ளி 21 ஆயிரத்து 638  கிராமும் கிடைத்தது.  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,012  ம் கிடைத்தன.  இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இதையடுத்து அடுத்த நாள் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து பிரித்து எண்ணப்பட்டது.  இருநாள் எண்ணிக்கை முடிவில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 5 கோடியே 64 இலட்சத்து 69 ஆயிரத்து 457 கிடைத்தது.  உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல்,  தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தங்கம் 1,612 கிராமும், வெள்ளி 28,249 கிராமும் கிடைத்தது.  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,734 ம் கிடைத்தன.  இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.   உண்டியல் எண்ணிக்கையில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.

 

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version