Lord Murugan: முருகனுக்கு மாலை அணிபவர்கள்.. பின்பற்ற வேண்டிய விரத முறைகள்!

மாலை அணிந்தவர்கள் கண்டிப்பாக விரத முறைகளை பின்பற்ற வேண்டும். பாய், தலையணை, போர்வை ஒன்றை எதையும் பயன்படுத்தக் கூடாது. வேஷ்டி தரையில் விரித்து தான் உறங்க வேண்டும். துண்டை சுருட்டி தலையணையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Lord Murugan: முருகனுக்கு மாலை அணிபவர்கள்.. பின்பற்ற வேண்டிய விரத முறைகள்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

28 Nov 2024 17:14 PM

பொதுவாக கடவுள்கள் பல உருவங்களில், பெயர்களில், வெவ்வேறு அவதாரங்களில் நமக்கு காட்சி கொடுக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. இத்தகைய கடவுள் அருளை பெற நாம் விரதம் இருப்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இந்த கடவுளுக்கு விரதம் இருந்தால் விசேஷம் என ஒவ்வொன்றும் வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு மற்ற மாதங்களை காட்டிலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் அதிக அளவிலான பக்தர்கள் மாலை அணிந்து முருகனின் அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை சென்று வழிபடும் வழக்கம் உள்ளது. முருகனுக்கு   தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, ஆவணி திருவிழா என ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விசேஷம் இருக்கும். இந்தப் பண்டிகையின் போதும் சிலர் மாலை அணிந்து முருகன் கோவிலுக்கு சென்று வணங்குவர்.

Also Read: Sabarimala: வீட்டிலேயே ஐயப்ப பக்தர்கள் கன்னிப்பூஜை எப்படி நடத்தலாம்?

கவனத்தில் கொள்ள வேண்டியவை

இப்படியாக முருகனுக்கு மாலை அணிந்தால் நாம் என்ன விரத முறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி காணலாம். அதாவது முருகப்பெருமானுக்கு இவர்கள்தான் மாலை அணிய வேண்டும் என்ற விதிமுறை கிடையாது. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என யார் வேண்டுமானாலும் மாலை அணிந்து விரதம் இருக்கலாம். பெண்கள் தங்களுடைய மாதவிலக்கு நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் விரதம் இருக்கலாம்.

ஆனால் முருகனுக்கு சிலர் விளையாட்டுத்தனமாக மாலை அணிந்து விரதம் இருக்கிறார்கள். அப்படியெல்லாம் செய்யக்கூடாது. நாம் முருகனுக்கு மாலை அணிந்து எந்த மாதிரியான விரத முறையைப் பின்பற்ற வேண்டும் என்பது பற்றி காணலாம்.

முருகப் பெருமானுக்கு மாலை அணியும்போது 108 மணிகள் கொண்ட ருத்ராட்ச மாலை மட்டுமே அணிய வேண்டும். அதில் ஒரு மாலை பிரதானமாக இருக்கும். அதில் முருகப்பெருமான் உருவம் பதித்த டாலர் அணிந்து கொள்ள வேண்டும். மற்றொரு மாலை துணை மாலையாக இருக்கலாம் அதில் டாலர் தேவையில்லை. மேலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் வரும் சஷ்டி திதி, கிருத்திகை, விசாக நட்சத்திரம், செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களை கணக்கில் கொண்டு மாலை அணிந்து கொள்ளலாம்.

மேலும் மாலை அணிபவர்கள் பெற்றோர், குருசாமி, ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஆகியோர் மூலமாக வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனை செய்து விளக்கேற்றி வழிபட்ட பின் அணிந்து கொள்ளலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் தானாக அணிந்துக் கொள்ளகூடாது. கோயிலில் அணிய வேண்டும் என நினைப்பவர்கள் எந்த கோவிலாக இருந்தாலும் சரி சென்று அங்குள்ள அர்ச்சகர் கையால் அணிந்து கொள்ளலாம்.

Also Read: Astrology: அப்படிப்போடு.. 6 ராசிகளுக்கு ஆபீஸில் பிரமோஷன் நிச்சயம்!

விரத முறைகள் என்னென்ன?

மாலை அணிந்தவர்கள் கண்டிப்பாக விரத முறைகளை பின்பற்ற வேண்டும். பாய், தலையணை, போர்வை ஒன்றை எதையும் பயன்படுத்தக் கூடாது. வேஷ்டி தரையில் விரித்து தான் உறங்க வேண்டும். துண்டை சுருட்டி தலையணையாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் செருப்பு அணியக்கூடாது. அதே சமயம் உத்தியோகத்தில் ஷூ கட்டாயம் என நினைப்பவர்கள் அதனை அணிந்து கொள்ளலாம். தொழிலுக்கும், நாம் கடைபிடிக்கும் விரதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிகை அலங்காரம், அசைவம் சாப்பிடுவது, போதை பொருட்கள் பயன்படுத்துதல், தாம்பத்திய சிந்தனை, பெண்களை தவறாக பார்ப்பது, கோபம் கொள்வது, கடும் சொற்கள் பேசுவது என எதையும் செய்யக்கூடாது. விரதம் இருக்கும் காலகட்டத்தில் முடிந்தவர்கள் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். முடியாதவர்கள் மூன்று வேளை எடுத்துக் கொண்டாலும் தனித்தட்டு, டம்ளர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.

தினமும் செய்ய வேண்டியவை

அதேபோல் பச்சை அல்லது காவி கலர் வேஷ்டி, துண்டு அணிந்து கொள்ளலாம். தினமும் இரண்டு வேளை குளித்துவிட்டு கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பது கிடையாது. நேரம் கிடைத்தால் கோயிலுக்கு செல்லலாம். முடியாவிட்டால் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்போது குறைந்தபட்சம் வாழைப்பழம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். தினமும் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளித்து விட வேண்டும்.

நமது உடைகளை நாமே துவைக்க வேண்டும். ஏற்கனவே காலையில் உடுத்திய உடைகளை மாலையில் குளித்துவிட்டு மீண்டும் உடுத்தக்கூடாது. முருகனின் பக்தி பாடல்கள், கந்த சஷ்டி கவசம், முருக புராணம் என அனைத்தையும் பாட வேண்டும். நெற்றியில் எப்போதும் சந்தனம், விபூதி இல்லாமல் இருக்க கூடாது. வாய்ப்பு கிடைத்தால் அருகில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

48 நாட்கள் விரதம் இருக்க முடியும் என்பவர்கள் அதனை மேற்கொள்ளலாம். இல்லாவிட்டால் குறைந்தது 3,5,7,12,15,21,27 நாட்கள் விரதம் இருக்கலாம். முருகனுக்கு அலகு குத்தி, காவடி எடுத்து பாதயாத்திரை செல்ல நினைக்கும் பக்தர்கள் அதற்காக முன்கூட்டியே தயாராக வேண்டும்.

மேலும் பாதயாத்திரை சென்று சாமி தரிசனம் செய்த பிறகு எக்காரணம் கொண்டும் கோவிலில் வைத்து மாலையைக் கழட்டும் வழக்கத்தை வைத்துக்கொள்ளக்கூடாது. உதாரணமாக திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அங்குள்ள அர்ச்சகரிடம் மாலையை கழற்றி வாங்கி அதனை கடலில் எறிந்து விடும் பழக்கம் இருக்கிறது. அப்படியெல்லாம் செய்யக்கூடாது. நாம் எங்கு தொடங்கினோமோ அங்குதான் முடிக்க வேண்டும். உங்கள் ஊரில் மாலை அணிந்து நீங்கள் பாதயாத்திரை தொடங்கினால் அதே ஊருக்கு திரும்ப வந்து மாலையை கழற்ற வேண்டும். அப்போதுதான் நம்முடைய விரத காலம் முழுமையாக முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?
பறக்கும்போது தூங்கும் பறவைகள் என்னென்ன தெரியுமா?