Hardik Pandiya: இது கனவல்ல.. நிஜம் தான்.. நாம் உலக கோப்பையை வென்றுவிட்டோம் -ஹர்திக் பாண்டியா உருக்கம்

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக கோப்பை தொடரில் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்ற சிலர் வீரர்களை தவிர்த்து, மற்ற வீரர்கள் அனைவரும் மிகவும் பொறுப்புடன் விளையாடினர். இந்த சீசன் முழுவதும் இந்தியா பல போட்டிகளில் வெல்ல முக்கிய காரணமாக ஹர்திக் பாண்டியா இருந்துள்ளார்.

Hardik Pandiya: இது கனவல்ல.. நிஜம் தான்.. நாம் உலக கோப்பையை வென்றுவிட்டோம் -ஹர்திக் பாண்டியா உருக்கம்

ஹர்திக் பாண்டியா

Updated On: 

01 Jul 2024 02:49 AM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு குழுக்களாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் வெற்றிபெற்ற நான்கு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதில், வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் பார்படாசில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று உலக கோப்பையை கைப்பற்றியது. உலக கோப்பை தொடர் முழுவதும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த விராட்கோலி இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Also Read: T20 World Cup: நிறைவான இதயத்துடன் விடைபெறுகிறேன்.. டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு..!

உலக கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா, நான் எப்பொழுதும் கடவுளை நம்புவேன். கடந்த 6 மாதங்கள் ஏராளமான விஷயங்கல் என்னைப்பற்றி கூறப்பட்டு வந்தன. என்னை பற்றி தெரியாதவர்கள்கூட அதிகமாக பேசினார்கள். எல்லாவற்றிற்கும் நான் அமைதியாகவே இருந்தேன். எனது வாழ்க்கை, ஒரு கட்டத்தில் அவர்களுக்கான பதிலடியாக இருக்கும் என நம்பினேன். அது இப்போது நடந்துள்ளது. கடுமையாக உழைத்து பயிற்சி செய்தால் நிச்சயமாக நம்மால் ஜொலிக்க முடியும். இதனால் தான் எனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இந்த வெற்றி எனக்கு அவ்வளவு முக்கியமாக இருந்தது. நாங்கள் கடந்த ஆறு மாதங்களாக கடும் உழைப்பை போட்டு இருக்கிறோம். ஆனால் அதற்கான பலன் அப்பொழுது கிடைக்கவில்லை. ஆனால் இன்று ஒட்டுமொத்த தேசமும் எது வேண்டும் என்று நினைத்ததோ, அது தற்போது கிடைத்துவிட்டது. இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயமாக இருக்கிறது.

Also Read: IND vs SA: 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றியது இந்தியா..!

போட்டிக்கு பிறகு பேசிய ஹர்த்திக் பாண்டியா, இந்த உணர்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எப்போதும் கனவாக இருந்ததாகவும் கூறினார். ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுடன் பல ஆண்டுகள் விளையாடியது அற்புதமான நிகழ்வு என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.  மேலும், உலக கோப்பையை வென்றது குறித்து தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள ஹர்திக், காலை வணக்கம் மக்களே, இது கனவல்ல, நிஜம்தான். நாம் உலக கோப்பையை வென்றுவிட்டோம்! தன்னுடைய மகிழ்ச்சியை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்