5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs SA: 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றியது இந்தியா..!

ICC T20 World Cup Final Match Report : 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி 17 வருடத்திற்கு பிறகு 2 வது முறையாக T20 உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

IND vs SA:  17 வருடங்களுக்கு பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றியது இந்தியா..!
intern
Tamil TV9 | Updated On: 30 Jun 2024 02:20 AM

டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். கேப்டன் ரோகித் ஷர்மா கேசவ் மகாராஜா பந்தில், ஹெய்ன்ரிக் க்ளாசெனிடம் கேட்ச் கொடுத்து அவுட் கொடுத்து 9 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 3 ரன்கள் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் இடத்தில் ஆட்டமிழந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் ஆரம்பம் முதலில் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வந்த விராட் கோலி இறுதி போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் ஆறு பவுண்டரிகள் என 76 ரன்களை குவித்தார்.

Also Read: T20 World Cup: டி20 உலக கோப்பை தொடர்.. வெற்றிபெறும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை விவரங்கள்…!

விராட் உடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் 31 பந்துகளில் 47 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே 16 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா 2 பந்துகளுக்கு 2 ரன்களை எடுத்து நோர்ட்ஜே பந்து வீட்டில் கேசவ் மகாராஜிடம் கேட்ச் கொடுத்த அவுட்டானார். ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு இரண்டு பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Also Read: IND vs SA Pitch Report: பார்படாஸ் மைதானத்தில் உலக கோப்பை இறுதிப்போட்டி … மைதானம் யாருக்கு சாதகம்..!

இதனைத் தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, தனது ஆட்டத்தில் தொடங்கியது. தென்னாபிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் குவின்டன் டி காக் ஜோடி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், ரீசா பும்ராவின் சுழலில் சிக்கி ஐந்து பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து விளையாடிய டி காக் 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த குல்தீப் யாதவிடன் கேட்ச் கொடுத்து அவுட்டானர். எய்டன் மார்க்ரம் 5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் பந்து வீச்சில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்த அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்துகளில் 31 ரன்களை குவித்து அக்சர் பட்டேலிடம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.  இறுதியில் கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின்  வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தினர். இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Latest News