T20 World Cup: டி20 உலக கோப்பை தொடர்.. வெற்றிபெறும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை விவரங்கள்…!
IND vs SA: நடப்பு டி20 ஐபிஎல் தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், வெற்றி பெரும் அணிக்கு சுமார் 20 கோடி ரூபாயையும், மொத்த அணிக்கும் 98 கோடியே 30 லட்ச ரூபாயையும் ஐசிசி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
டி20 உலக கோப்பை போட்டிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், பார்படாஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக கோப்பை தொடரில், இந்திய அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு 10 வருடங்கள் கழித்து தகுதிபெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக தகுதிபெற்றுள்ள நிலையில், இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகாமாகியுள்ளது. இரு அணிகளும் இந்த தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூ.20 கோடி பரிசுத்தொகையாக என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
Also Read: IND vs SA Pitch Report: பார்படாஸ் மைதானத்தில் உலக கோப்பை இறுதிப்போட்டி … மைதானம் யாருக்கு சாதகம்..!
நடப்பு உலக கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவித்துள்ள நிலையில், இறுதிப்போட்டியில் 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பல்வேறு பிரிவுகளில் அணிகள் மற்றும் வீரர்களுக்காக பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக இந்திய மதிப்பில் 98 கோடியே 30 லட்ச ரூபாயை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி ஒதுக்கியுள்ளது.
இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு, 20 கோடியே 42 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இறுதிப் போட்டியில் 2வது இடம் பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் 10 கோடியே 67 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. அரையிறுதி வரை முன்னேறி தோல்வியை தழுவிய இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு, 10 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: IND vs SA Playing XI: இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை.. உத்தேச அணி விவரங்கள் இதோ..!
ஐசிசி T20 உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத் தொகையாக ரூ. 93.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சூப்பர் 8 சுற்றோடு வெளியோடு வெளியேறிய வெளியேறிய அணிக்கு தலா ரூ. 3.18 கோடியும், 9 முதல் 12வது வரையிலான இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா இந்திய மதிப்பில் ரூ. 2.06 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. 13 முதல் 20 வரையிலான இடங்களை பிடித்த அணிகளுக்கு, இந்திய மதிப்பில் ரூ. 1.87 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகளுக்கு ஒவ்வொரு வெற்றிக்கும், இந்திய மதிப்பில் ரூ. 26 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.