5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs SA Playing XI: இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை.. உத்தேச அணி விவரங்கள் இதோ..!

ICC T20 Cricket world cup, Final 2024 IND vs SA Playing XI: நடப்பு 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த உலக கோப்பை தொடரில் முதன்முறையாக 20 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் 17 நாட்கள் லீக் சுற்றுகள் நடைபெற்ற நிலையில், அடுத்து சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகள் முடிவுற்று இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் பார்படாஸ் மைதானத்தில் இன்று மோதுகின்றன. இந்திய அணியின் வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் இடம்பெறும் உத்தேச வீரர்கள் பட்டியல் -குறித்து காணலாம்.

IND vs SA Playing XI:  இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை.. உத்தேச அணி விவரங்கள் இதோ..!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா
intern
Tamil TV9 | Updated On: 29 Jun 2024 13:33 PM

டி20 உலக கோப்பை போட்டிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், பார்படாஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக கோப்பை தொடரில், இந்திய அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு 10 வருடங்கள் கழித்து தகுதிபெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக தகுதிபெற்றுள்ள நிலையில், இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகாமாகியுள்ளது. இரு அணிகளும் இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகளில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: IND vs SA Pitch Report: பார்படாஸ் மைதானத்தில் உலக கோப்பை இறுதிப்போட்டி … மைதானம் யாருக்கு சாதகம்..!

இந்திய அணி அனைத்து போட்டிகளில் எளிதில் வெற்றிபெற்ற நிலையில், தென் ஆப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் போராடியே வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டு அணிகளும் மோதும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இந்திய அணி 14 முறையும், தென்னாப்ரிக்கா அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில், ஐசிசி தொடர்களில் தோனி தலைமையில், கடைசியாக இந்திய அணி 2013-ம்ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி கோப்பைகள் எட்டாக்கனியாகவே உள்ளது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் இந்திய அணி கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். ஆனால் அதே சமயத்தில் இந்த தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வரும் விராட் கோலி இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் நடப்பு தொடரில் நன்றாக விளையாட வில்லை. எனக்கு பதிலாக வேறு ஒரு வீரரை தேர்வு செய்தால் எனக்கு சந்தோஷம் தான் என்று கூறியுள்ளார். ஆனால் இன்றைய போட்டியில், எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படும் நிலையில் உத்தேச வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

Also Read: Virat Kohli: உலக கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட்.. சோகத்தில் ரசிகர்கள்..!

இந்தியா அணியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெறுவர் என்றும், இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா அணியில் ரீஸா ஹென்றிக்ஸ், குயிண்டன் டி காக், அய்டன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், கேஷவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, ஆன்ர்ச் நோர்ட்ஜே, பார்ட்மென் ஆகியோர் இடம்பெறுவர்.

Latest News