Hardik Pandiya: ரசிகர்களுக்கு மனப்பூர்வமாக நன்று தெரிவித்த ஹர்திக்..!
டி20 உலக கோப்பையை வென்று இந்தியா திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள், மும்பையில் உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் காட்டிய அன்பிற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவின் தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.
டி20 உலக கோப்பையை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் மும்பை கடற்கடை சாலையில் பேரணியாக அணிவகுத்து சென்றனர். கொட்டும் மழையிலும் லடசக்கணக்கான ரசிகர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இறுதிப்போட்டி நடைபெற்ற நான்கு இடத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு பிறகு இந்திய அணி இன்று காலை சுமார் 6.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. தனிவிமானம் மூலம் தாயகம் திரும்பிய வீரர்களுக்கு நள்ளிரவு முதல் டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்து வரவேற்பு அளித்தனர். இந்தியா.. இந்தியா.. ரோகித், விராட், ஹர்திக். என முழக்கங்களை எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்திக் பாண்டியா, “இந்தியா, நீங்கள்தான் என்னுடைய உலகம். என்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து இந்த எல்லா அன்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன். மழையையும் பொருட்படுத்தாது, எங்களை கொண்டாட வெளியே வந்த உங்களுக்கு நன்றி. நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். நாம் 140 கோடி பேருமே சாம்பியன்ஸ். நன்றி மும்பை, நன்றி இந்தியா” என்று ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், ரசிகர்கள் பலரும் அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். மைதானத்திலேயே அவரை ரசிகர்கள் பலரும் கேலி செய்து கூச்சலிடும் வீடியோக்கள் வைரலாகின. ஆனால் தற்போது உலக கோப்பையை வென்றவுடன் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு காட்டும் அன்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது ஐசிசி டி20 இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவர் போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பியது.
பெரும் ரசிகர் கூட்டத்தின் நடுவே இந்திய அணி ஒருவழியாக மும்பையின் வான்கடே மைதானத்தை வந்தடைந்தது. அங்கும் ஏராளமான ரசிகர்கள் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். பின்னர் வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.