Rahul Dravid: ராகுல் டிராவிட்டை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும் – ரசிகர்கள் வேண்டுகோள்
நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடும் 55 வது போட்டி மற்றும் இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெல்லவேண்டும் என்று பலக்கோடி கணக்கான ரசிகர்கள் இறுதிப்போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த போட்டியுடன் மூத்த வீரர்கள் சிலருக்கு கடைசி போட்டியாக இருக்கும் நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு, இந்த போட்டி கடைசி போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது. இதனையொட்டி சமூக வலைதளத்தில் #DoItForDravid என்ற ஹேஷ்டேக் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து தன்னுடைய கருத்தை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கடைசி போட்டியாக இருந்த நிலையில், இந்திய அணியின் அனைத்து வீரர்களும், சச்சின் டெண்டுல்கருக்காக உலகக்கோப்பையை நிச்சயம் வெல்வோம் என்று கூறினர். அதேபோல் வென்று காட்டிய நிலையில், தற்போது டி20 உலகக்கோப்பை தொடரை கிரிக்கெட்டின் சுவர் ராகுல் டிராவிட்டிற்காக இந்திய அணி வீரர்கள் வெல்ல வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read: T20 World Cup: டி20 உலக கோப்பை தொடர்.. வெற்றிபெறும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை விவரங்கள்…!
குறிப்பாக 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் இந்திய அணி வெளியேறிய நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், 17 வருடங்களுக்கு பிறகு ராகுலின் ஆசையை இந்திய வீரர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No words just pure emotions 🥹
A series win to remember 🔝#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/AtyB7tJq4c
— BCCI (@BCCI) February 26, 2024
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் இந்த போட்டியுடன் ஓய்வு பெறும் நிலையில், பிசிசிஐ ஒரு வீடியோ எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு நன்றி தெரித்தது. அந்த வீடியோவில் கிரிக்கெட் மைதானத்திற்கு அப்பால் உருவாக்கப்பட்ட தருணங்களை எடுத்துரைக்கும் விதத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வார்த்தைகளில் ஒரு நிகழ்வு நிறைந்த பயிற்சி பயணம்” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவில் ராகுல் டிராவிட்,” அழகிய நினைவுகளை நான் உருவாக்கியிருக்கிறேன். இந்திய அணிக்கு பயிற்சி அளித்தது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மகிழ்வான ஒன்று” என்று கூறியுள்ளார்
ராகுல் டிராவிட் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை முடிவடைந்த உடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றார். டிராவிட் தலைமையில் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2022 டி20 உலக கோப்பை அரையிறுதிப்போட்டி வரை சென்ற நிலையில் ஆசிய கோப்பை தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.