Indian Team: உலக கோப்பையை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் சிக்கல்..!

டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் வீரர்கள் இன்று நாடு திரும்புவதாக கூறப்பட்ட நிலையில், பார்படாஸில் கடுமையான சூறாவளி வீசி வருவதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், நாடு திரும்புவதில் சிக்கல் உருவாகியுள்ளது. இந்திய வீரர்கள் பார்படாஸ் ஹோட்டல்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Indian Team: உலக கோப்பையை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் சிக்கல்..!

பார்படாஸ் சூறாவளி

Updated On: 

02 Jul 2024 02:26 AM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு குழுக்களாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் வெற்றிபெற்ற நான்கு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதில், வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் பார்படாசில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று உலக கோப்பையை கைப்பற்றியது. உலக கோப்பை தொடர் முழுவதும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த விராட்கோலி இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Also Read:Rohit Sharma: டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா படைத்துள்ள சாதனைகள்..!

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2 -வது முறையாக டி20 உலககோப்பை கைப்பற்றியுள்ள இந்திய அணி இன்று இந்தியாவிற்கு வருகை தர இருந்த நிலையில், திடீரென்று பார்படாஸில் ஏற்பட்ட கடும் சூறாவளியினால், விமான சேவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் இன்று நள்ளிரவு பார்படாஸில் இருந்து இந்தியா வருகை தர இருந்தனர்.

மும்பை விமான நிலையத்தில் இந்திய வீரர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டிருந்த நிலையில், பார்படாஸில் கடும் சூறாவளி வீசி வருவதால் இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அங்கு மணிக்கு 130 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதுடன், கனமழையும் கொட்டி வருகிறது. இதனால் பார்படாஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு இருந்து புறப்படும் விமானங்களும், அங்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தவிர அங்குள்ள ஹோட்டல்கள், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைகளில் முடங்கியுள்ளனர். பார்படாஸில் 4ம் கட்ட சூறாவளி வீசி வருகிறது. மிக கடுமையான காற்றுடன் அதீத கனமழை பெய்து வருவதால் அடுத்த 24 மணி நேரம் விமான நிலையம் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

Also Read:  T20 World Cup: நிறைவான இதயத்துடன் விடைபெறுகிறேன்.. டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு..!

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ”நாங்கள் அனைவரும் சூறாவளியில் சிக்கியுள்ளோம். நிலைமை சீரானபிறகு நாடு திரும்பி இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும்” என்று கூறியுள்ளார். பார்படாஸ் விமான நிலையம் மூடபட்டுள்ள நிலையில், இந்திய வீரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்களை தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வர ஜெய்ஷா முடிவு செய்துளளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!