5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

T20 World Cup: வங்கதேசத்தை 50 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி..!

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 8 சுற்றின் குரூப் 1 போட்டியில், இந்திய அணி வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை மட்டுமே சேர்த்தது. 197 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி தோல்வி அடைந்தது.

T20 World Cup: வங்கதேசத்தை 50 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி..!
இந்திய அணி
intern
Tamil TV9 | Updated On: 23 Jun 2024 13:39 PM

டி 20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் முடிவுற்று சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. குருப் 1 போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய போட்டியில் வங்கதேச அணியுடன் இந்தியா மோதியது. மேற்கு இந்தியத் தீவுகளின் ஆன்டிகுவாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷான்டோ பவுலிங்கை தேர்வு செய்தார்.

Also Read: இனி லேட்டா சென்றால் அரை நாள் சம்பளம் கட்.. ஊழியர்களை அலர்ட் செய்த மத்திய அரசு!

இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அதிரடியாக விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரோஹித் 11 பந்தில் 23 ரன்களும், விராட் கோலி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 36 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்களும், ஷிவம் துபே 34 ரன்கள், ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை சரிவிலிருந்து மீட்டனர். வங்கதேசம் சார்பில் ரிஷாத் மற்றும் தன்சிம் தலா 2 விக்கெட்டுகளும், ஷகிப் 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்தது. வங்கதேச வீரர்கள் லிட்டன் தாஸ் 13, ஹசன் 29, தவ்ஹித் 4, ஷகிப் 11, கேப்டன் ஷான்டோ 40, ஜாகிர் அலி 1, ரிஷாத் 24 மற்றும் மஹ்மதுல்லா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் குல்தீப் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Also Read: கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிப்பு

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்டியா ஐசிசி தொடர்களில் முதன் முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தகக்து. தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் இறுதிப்போட்டியில், இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

Latest News