kane williamson: ஒப்பந்தம், கேப்டன் பொறுப்பும் இரண்டும் வேண்டாம்.. கேன் வில்லியம்சன் அதிரடி முடிவு..! - Tamil News | kane williamson: no contract, captaincy and both.. kane williamson action decision..! | TV9 Tamil

kane williamson: ஒப்பந்தம், கேப்டன் பொறுப்பும் இரண்டும் வேண்டாம்.. கேன் வில்லியம்சன் அதிரடி முடிவு..!

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 2024 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அணி ஒப்பந்தம் மற்றும் ஒரு நாள் டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிகள் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகி உள்ளது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kane williamson: ஒப்பந்தம், கேப்டன் பொறுப்பும் இரண்டும் வேண்டாம்.. கேன் வில்லியம்சன் அதிரடி முடிவு..!

கேன் வில்லியம்சன்

Published: 

19 Jun 2024 14:53 PM

டி20 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்தின் அணி குரூப் 8 சுற்றுக்கு முன்னேறாமல் லீக் போட்டிகளுடன் வெளியேறியது. 2010ம் ஆண்டு முதல் 10 ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 7 முறை அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. மேலும் இதுவரை நியூஸ்லாந்து அணிக்காக 358 போட்டிகளில் விளையாடி உள்ள கேன் வில்லியம்சன் இதுவரை 18,128 ரன்கள் எடுத்துள்ளார். 2015 மற்றும் 2019 உலகக்கோப்பை இறுதி போட்டி வரை முன்னேறி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக கேப்டன் பொறுப்பில் இருந்துள்ளார். தற்போது, பின்னர், நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் தலைமையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நியூசிலாந்து அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் புறப்பிலிருந்தும் விலகிய கேன் வில்லியம்சன் தற்போது டி20 மற்றும் ஒரு நாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

Also Read: Haris rauf : ரசிகருடன் பொதுவெளியில் சண்டையிட்ட பாகிஸ்தான் வீரர்.. வீடியோ வைரல்..!

வரும் 2024 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தை கேன் வில்லியம்சன் நிராகரித்துள்ளதாகவும் மற்றும் t20 மற்றும் ஒரு நாள் கேப்டன்சி பொறுப்பில் இருந்தும் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. நியூசிலாந்து அணிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் வீரர்களே அந்த அணியின் ஒரு நாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடரின் சேர்க்கப்படுவர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை முன்னிறுத்தியே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார் நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்க தயாராக இருப்பதாகவும், நியூசிலாந்தின் போட்டிகள் இல்லாத போது வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக கூறினார். அதனால் என்னால் நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்றும் அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பு இல்லாதது. நான் நியூசிலாந்து அணிக்காக நிறைய கடமைப்பட்டுள்ளேன். கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில் எனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும் அவசியம் ஆகிறது. நான் என் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, அவர்களுடன் உடன் இருப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் என கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

Also Read: Tamilnadu Weather Alert: இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. தலைநகர் சென்னையில் எப்படி ?

மேலும் இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளதாவது, கேன் வில்லியம்சனுக்காக தங்களது ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளதாகவும், எங்களுடைய மிகச்சிறந்த பேட்ஸ்மேனுகாக நாங்கள் இதை செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!