Rohit Sharma: சர்வதேச டி20 போட்டியிலிருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா ஓய்வு..!
Rohit Sharma Reteriment: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்தியா அணியின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று வரலாற்று சாதனைப்படைத்த கேப்டன் ரோகித் ஷர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், ரோகித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்திய அணியை கேப்டன் ரோகித் ஷர்மா கேப்டனாக பொறுபேற்றது முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 50 ஓவர் உலக கோப்பை போட்டி, ஆனால் இந்திய அணி தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை தொடரை கைப்பற்றிய பிறகு இந்திய அணியால் ஐசிசி சாம்பியன் கோப்பையை வெல்ல முடியவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய அணி டி20 உலக கோப்பையை 17 வருடங்களுக்கு பிறகு ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்ததுள்ளது. இந்நிலையில், சாம்பியன் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா சர்வதேச டி20 கோப்பையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Also Read: T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி… வாழ்த்தும் பிரபலங்கள்!
ரோகித் ஷர்மா இதுவரை மொத்தம் 159 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், டி20 கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக, 4231 ரன்களைக் குவித்துள்ள அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார். டி20 கிர்க்கெட்டில் இதுவரை 5 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா, அதிக அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். டி20 கிரிக்கெட்டில் இதுவரை 32 அரைசதங்கள் அடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில், 200 சிக்சர்கள் அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையுடன் 205 சிக்சர்களுடன் முதலிடத்திலும் தற்போது முதலிடத்தில் உள்ளார். அதேபோல 383 பவுண்டரிகள் அடித்தவர்களில் முதலிடத்தில் திகழ்கிறார்.
It’s your Captain Rohit Sharma signing off from T20Is after the #T20WorldCup triumph! 🏆
He retires from the T20I cricket on a very special note! 🙌 🙌
Thank you, Captain! 🫡#TeamIndia | @ImRo45 pic.twitter.com/NF0tJB6kO1
— BCCI (@BCCI) June 29, 2024
நேற்றைய டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, டி20 கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான விராட் கோலி முதலில் தனது ஓய்வை அறிவித்தார். இதனைதொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Also Read: Virat Kohli Retirement: சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கிங் கோலி..!
இதுகுறித்து அவர் பேசும்போது, நான் டி20 கிரிக்கெட் மூலமாக தான் இந்திய அணியில் அறிமுகமானேன். இந்த டி20 உலகக்கோப்பையை நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில், உலகக்கோப்பையை வென்ற பிறகு நான் எனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று இருந்தேன். உலகக்கோப்பையை வென்ற தருணத்தில் எப்படி இருந்தது என்று வார்த்தைகளால் என்னால் சொல்ல இயலாது. மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ரோகித் சர்மா கூறினார்.
இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் வெற்றியை ருசித்த கேப்டனாகவும், டி20 உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமை ரோகித் சர்மா திகழ்கிறார் என்பது குறிப்பிடதக்கது.