5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

T20 World Cup: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

டி20 உலக கோப்பை போட்டியில், செயின்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது. நடப்பு டி20 உலக கோப்பை போட்டியில், முதன் முறையாக ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

T20 World Cup: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
ஆப்கானிஸ்தான் வீரர்கள்
intern
Tamil TV9 | Updated On: 23 Jun 2024 15:58 PM

டி 20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் முடிவுற்று சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய குரூப் 8 சுற்றின் 48 வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்களும், இப்ராகிம் சார்டான் 51 ரன்களும் எடுத்து அதிரடி காட்டினர். ஓமர்சாய் 2, கரீம் ஜனத் 13 ரன்களிலும், ரஷீத் கான் 2 ரன்களிலும், முகமது நபி 10 குல்புதீன் நயிப் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் ரன்கள் எடுக்க தவறியதால், 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி அணியின் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஆடம் ஸம்பா 2 விக்கெட்டுகளும், மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Also Read: GOAT Movie 2nd Single: அக்கா பவதாரணி குறித்து யுவன் உருக்கம்… ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார். டேவிட் வார்னர் 3 ரன்களிலும் ஆவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். மிட்செல் மார்ஷ் 12 ரன்களிலும், ஆட்டமிழந்தனர். க்ளைன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 59 ரன்களை குவித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில், 127 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Also Read: Ajith: கார் ரேஸ் களத்தில் அஜித்… இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

இந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் வெற்றியின் மூலம் புது வரலாற்றை ஆப்கானிஸ்தான் அணி படைத்துள்ளது. கடந்த உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் மற்றும் ஐசிசி உலக கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Latest News