T20 World Cup: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி..! - Tamil News | T20 World Cup: Indian team beat Pakistan by 6 wickets for a thrilling victory. | TV9 Tamil

T20 World Cup: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி..!

IND vs PAK, T20 World Cup 2024: கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. மூன்று விக்கெட்களை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

T20 World Cup: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி..!

இந்திய அணி

Updated On: 

10 Jun 2024 11:38 AM

டி20 உலககோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் கடந்த 2 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டிய உலகம் முழுவதும் இருந்த இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, கோடிக்கணக்கானோர் நேற்று நேரலையில் பார்த்து ரசித்தனர். இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கு 120 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடந்த 19-வது லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. 8 மணிக்கு தொடங்கவேண்டிய போட்டி, மழை காரணமாக சற்று தாமதமாக தொடங்கியது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்னரே, மழை காரணமாக தாமதம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் மற்றும் ரோகித் ஆட்டத்தை தொடங்கினார். மைதானத்திற்குள் இருவரும் இறங்கிய உடனே மழை தொடங்கியதால் போட்டி தாகமதமாக தொடங்கியது.

Also Read: List of Ministers who took oath: மோடியுடன் இன்று பதவியேற்கும் 30 அமைச்சர்கள்.. யார் யாருக்கு எந்த துறை?

ஒருவழியாக மழை நின்று ஆட்டம் தொடங்கிய நிலையில், அதிரடியாக தொடங்கிய விரட்டிய கோலி ஆட்டத்தை தொடங்கினார். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரோகித் பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அடிக்கத்தொடங்கினார். விராட் 4 ரன்களிலும், ரோகித் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அக்சர் படேல் 20 ரன்னில் அவுட் ஆனார். அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 7 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த நிலையில், அடுத்த வந்த துபே 3 ரன்னுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் இந்த போட்டியிலும் தனி ஆளாக 31 பந்துகளில் 6 பவுண்டரியை அடித்து, 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஹர்திக் 7 ரன்னுக்கும், அர்ஷ்தீப் சிங் ரன்னும் ஆட்டமிழந்தனர். பும்ரா டக்-அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில், இந்தியா 20 ஓவர்கள் முடிவில், 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் தலா 3 விக்கெட்டையும், முகமது அமீர் 2 விக்கெட்டையும், ஷஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Also Read: PM Modi Swearing-in Ceremony 2024: 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி.. கரகோஷம் எழுப்பிய தொண்டர்கள்!

120 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் அணி இறுதியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் 13 ரன் எடுத்த போது, பும்ரா அவரது விக்கெட்டை பும்ரா வீழ்த்தி திருப்புமுனை கொடுத்தார். அடுத்து வந்த உஸ்மான் கான் 13 ரன்னிலும், ஃபகார் ஜமான் 13 ரன்னிலும் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் 31 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த இமாத் வாசிம் 15 ரன்னுக்கு ஆட்டமிழக்க 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் பவுலர்கள் அசத்தினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், பும்ரா 3 விக்கெட்டையும், ஹர்திக் 2 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். சிறப்பாக விளையாடி 3 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!