Team India Parade: வான்கடே மைதானம் நோக்கி ஊர்வலமாக சென்ற வீரர்கள்.. கொட்டும் மழையில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள், மும்பையில் வெற்றி ஊர்வலம் செல்வதற்கு பிசிசிஐ சிறப்பு ஏறபாடுகளை செய்து வந்தது. மேலும், பிரேத்யகமாக வடிவமைக்கப்பட்ட ஏசி பேருந்தில் வான்கடே மைதானத்தை நோக்கி சென்றனர். வழிநெடுகிலும், இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Team India Parade: வான்கடே மைதானம் நோக்கி ஊர்வலமாக சென்ற வீரர்கள்.. கொட்டும் மழையில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

கொட்டும் மழையில் ரசிகர்கள்

Updated On: 

04 Jul 2024 17:52 PM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு குழுக்களாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் வெற்றிபெற்ற நான்கு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதில், வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் பார்படாசில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்னர் கடந்த 2007-ல் தோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது 17 வருடத்திற்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Also Read: Cinema Rewind: கமல் படத்துக்கு பெயர் வைத்த ரஜினி.. கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த விஷயம்

காலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உலக கோப்பையை வழங்கி வாழ்த்து பெற்ற இந்திய அணியினர். மாலை 5 மணிக்கு பிரேத்யகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு பேருந்தில் ஊர்வலமாக அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது. பின்னர் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுவதால் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் பிசிசிஐ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இன்று இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் பாராட்டு விழாவிற்கு அனுமதி இலவசம் என்று கூறப்பட்ட நிலையில், ரசிகர்கள் இலவசமாக அணுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை நகரம் முழுவதும் பலத்த பாதுக்காப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: Health Tips : மோசமான தூக்கம்.. பசியின்மை.. மெக்னீசியம் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்கள்!

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!