5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rahul Dravid: கனடா அணியினரை உற்சாகப்படுத்திய இந்திய தலைமை பயிற்சியாளர்..!

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோத இருந்த போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில்,  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கனடா அணியினரை சந்தித்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த வீடியோவை பிசிசிஐ பகிர்ந்த நிளையில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rahul Dravid: கனடா அணியினரை உற்சாகப்படுத்திய இந்திய தலைமை பயிற்சியாளர்..!
ராகுல் டிராவிட்
intern
Tamil TV9 | Updated On: 18 Jun 2024 01:39 AM

 

புளோரிடாவில் இந்திய அணி விளையாட இருந்த கடைசி லீக் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோத இருந்த நிலையில், ஒரு ஓவர் கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. இதில் இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், இப்போட்டி இந்திய அணிக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. டி20 உலக கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கனடா அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று அந்நாட்டு வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த வீடியோவை பிசிசிஐ தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

ராகுல் டிராவிட் கன்னட வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார். அப்போது கனடா வீரர்கள் கையெழுத்திட்ட டி-ஷர்ட் ஒன்றினை பரிசாக வழங்கினர். அவர் கூறியதாவது, உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த உலக கோப்பை போட்டியில் நீங்கள் செயல்பட்ட விதம் பாராட்டதக்கது. நான் உண்மையில் உங்களைப் பாராட்ட விரும்புகிறேன் என்று கூறினார்.  நீங்கள் விளையாட்டை உண்மையாக விரும்புவதால் உங்களிடம் நேர்மை அதிகமாக உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கும் விளையாடுவதற்கும் தகுதி பெறுவதற்கும் நீங்கள் செய்த தியாகங்கள் ஏராளம். மேலும்உங்களது பல தியாகங்களை அனைவரும் அங்கீகரிக்கிறோம்.

Also Read: விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

இந்த பயணத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். இந்த பயணத்தை முன்னெடுத்து மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், உங்கள் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் விளையாடுவதற்கு நீங்கள் உத்வேகமாக உள்ளீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த விளையாட்டில் கிடைத்த முடிவுகள் பெரிய விஷயம் இல்லை. இதில் கிடைத்த அனுபவம் உங்களது சிறந்த கிரிக்கெட்டுக்கு வகுக்கும் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.

 

Also Read: Maharaja Movie : மகாராஜா வெளியான 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. மாஸ் காட்டும் விஜய்சேதுபதி..!

 

Latest News