5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Maharaja Movie : மகாராஜா வெளியான 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. மாஸ் காட்டும் விஜய்சேதுபதி..!

Maharaja box office collection day 3 : மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையே இத்திரைப்ப்டம் மிகப்பெரிய அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் மகாராஜாதி ரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Maharaja Movie : மகாராஜா வெளியான 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. மாஸ் காட்டும் விஜய்சேதுபதி..!
intern
Tamil TV9 | Updated On: 17 Jun 2024 13:25 PM

மகாராஜா வசூல் : மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அனுராக் காய்ஷப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள மகாராஜா அவருடைய 50வது திரைப்படம் என்பதால், இப்படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அனுராக் காய்ஷப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மகாராஜா திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் மிகப்பெரிய வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.  தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் மகாராஜா படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.

Also Read: Dark Circles: கண்களில் கருவளையமா? இனி கவலை வேண்டாம்… அருமையான டிப்ஸ் இதோ…!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சொல்லும் அளவிற்கு திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.வெளியான திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்ற வருத்தம் இருந்து வருகிறது. ஒரு சில திரைப்படங்கள் மட்டும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஓரளவு வெற்றிப்பெற்றன. மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் மகாராஜா திரைப்படம் இந்த ஆண்டில் வெற்றி பெற்ற 3-வது படமாக உள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் என்று பல்வேறு திருப்பங்கள் நிறைந்து வெளியான இந்த திரைப்படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் கிடைத்தன.  மகாராஜா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே வெளியான நிலையில், மூன்றே நாட்களில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி முதல் நாளில் உலகளவில் ரூ.7.5 கோடி வசூலை வாரிக்குவித்த இப்படம் இரண்டாம் நாளில்  ரூ.10.5 கோடி வசூலித்து இருந்தது.  மகாராஜா திரைப்படம் இன்னும் ஒரு வாரத்தில் 50 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: Bakrid 2024: நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்.. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி உற்சாகம்!

மேலும், இன்று திங்கள் கிழமை பக்ரீத் விடுமுறை என்பதால், மகாராஜா வெளியான முதல் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாயை தாண்டிய நிலையில், இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Latest News