World Chess Championship: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. டிங் லிரன் – டி.குகேஷ் மோதல்!
chess championship: சீனாவின் நடப்பு சாம்பியனான டிங் லிரனை எதிர்த்து இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான டி. குகேஷ் விளையாட உள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் அல்லாத ஒரு இந்தியர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவது இதுவே முதல்முறையாகும்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சிங்கப்பூரில் தொடங்கும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 24) முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் நடப்பு சாம்பியனான டிங் லிரனை எதிர்த்து இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான டி. குகேஷ் விளையாட உள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் அல்லாத ஒரு இந்தியர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவது இதுவே முதல்முறையாகும். கடைசியாக விஸ்வநாதன் ஆனந்த் விளையாடிய உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சனிடம் தோற்றார். இதனிடையே 14 சுற்றுகளாக நடைபெறும் இந்த செஸ் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
Also Read: PAK vs ZIM: வரட்டா மாமே.. ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே!
எகிறும் எதிர்பார்ப்பு
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த போட்டிக்கான அதிகாரப்பூர்வ தொடக்க விழா நடைபெற்றது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடும் தமிழக வீரரான டி.குகேஷ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டியில் ஒருவேளை அவர் வெற்றி பெற்றால் மிக இளம் வயதில் உலக செஸ் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைப்பார். உலக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்றதன் மூலமாக இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட டி. குகேஷ் தேர்வாகி இருந்தார்.
போட்டிகள் விபரம்
14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிரா ஆனால் அரைப்புள்ளியும் வழங்கப்படும். முதலில் 7.5 புள்ளியை எட்டுபவர் உலகச் சாம்பியன் பட்டத்தை பெறுவார். ஒருவேளை 14 சுற்றுகள் முடிவில் இருவரும் சம நிலையில் இருந்தால வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்படும்.
It all starts tomorrow. After 10 long years, an Indian player will play the World Chess Championship match! 18-year-old D Gukesh takes on Ding Liren – the first game starts tomorrow. You can watch it all in Mumbai – at Above the @IndieHabitat, 1:30 PM onwards!
We will bring you… pic.twitter.com/S0P1KpmCdA
— ChessBase India (@ChessbaseIndia) November 24, 2024
கிளாசிக்கல் முறையில் நடக்கும் இந்த செஸ் போட்டியில் முதல் 40 நகரத்தலுக்கு 120 நிமிடங்கள் வழங்கப்படும். எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும். இதனைத் தவிர்த்து 40 வது நகர்தலில் இருந்து ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30 வினாடி கூடுதலாக வழங்கப்படும். அதே சமயம் 40 ஆவது நகர்த்தலுக்கு முன்பாக டிராவில் முடிக்க அனுமதி கிடையாது என்பது விதியாகும்.
கடுமையான போட்டி
டி.குகேஷூடன் மோதும் சீன வீரரான டிங் லிரனும் சாதாரணமாக எண்ணி விட முடியாது. கடந்தாண்டு நடந்த போட்டியில்ரஷ்ய வீரர் இயான் நெபோம்னியாச்சியை வீழ்த்தி அவர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியிருந்தார். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த 10 ஆண்டுகளாக டிங் லிரன் செஸ் போட்டியில் பங்கேற்காமல் இருந்து வந்தார். உலக தரவரிசையில் குகேஷ் 5வது இடத்தில் உள்ள நிலையில் டிங் லிரன் 23வது இடத்தில் உள்ளார். இந்த போட்டி குறித்து பேசிய டி.குகேஷ், “என்னைப் பொறுத்தவரை, நான் யாரை எதிர்கொள்ளப் போகிறேன் என்பது தெளிவாகத் தெரிகிறது” என உறுதியாக கூறினார்.
Also Read: IPL Auction 2025: மீண்டும் அணியில் அஸ்வின்.. இதுவரை சிஎஸ்கே எடுத்துள்ள வீரர்கள் பட்டியல்!
மேலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கும் டிங் லிரனை நான் எதிர்கொள்ளப் போகிறேன். எனது வேலை மிகவும் தெளிவாக உள்ளது. ஒவ்வொரு கேமிலும் என்னைப் பற்றிய சரியான பங்களிப்பை கொடுத்து சிறந்த நகர்வுகளை மேற்கொள்வேன். நான் அதைச் செய்தால் டிங் லிரனின் சமீபத்திய தோற்றம் அல்லது அவரது சிறந்த நிலை எதுவாக இருந்தாலும் கூட, அது உண்மையில் முக்கியமாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.