World Cup Winning Team: நாளை இந்தியா திரும்பும் கிரிக்கெட் வீரர்கள்…! - Tamil News | World Cup Winning Team: Cricketers who will return to India tomorrow. | TV9 Tamil

World Cup Winning Team: நாளை இந்தியா திரும்பும் கிரிக்கெட் வீரர்கள்…!

Updated On: 

02 Jul 2024 21:15 PM

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், நாளை இரவு 7 மணி அளவில் டெல்லி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற பார்படோஸ் அருகே புயல் காரணமாக இந்திய அணி வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் எழுந்தது. தற்போது அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால் இன்ரு மாலை இந்தியா புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

World Cup Winning Team: நாளை இந்தியா திரும்பும் கிரிக்கெட் வீரர்கள்...!

இந்திய வீரர்கள்

Follow Us On

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு குழுக்களாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் வெற்றிபெற்ற நான்கு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதில், வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் பார்படாசில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று உலக கோப்பையை கைப்பற்றியது. உலக கோப்பை தொடர் முழுவதும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த விராட்கோலி இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Also Read: Tamilnadu Weather Alert: அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. தலைநகர் சென்னையில் எப்படி?

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2 -வது முறையாக டி20 உலககோப்பை கைப்பற்றியுள்ள இந்திய அணி இன்று இந்தியாவிற்கு வருகை தர இருந்த நிலையில், திடீரென்று பார்படாஸில் ஏற்பட்ட கடும் சூறாவளியினால், விமான சேவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் இன்று நள்ளிரவு பார்படாஸில் இருந்து இந்தியா வருகை தர இருந்தனர்.

மும்பை விமான நிலையத்தில் இந்திய வீரர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டிருந்த நிலையில், பார்படாஸில் கடும் சூறாவளி வீசி வருவதால் இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அங்கு மணிக்கு 130 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி வந்ததாலும், கனமழையும் கொட்டியதாலும், பார்படாஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு இருந்து புறப்படும் விமானங்களும், அங்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Also Read: Tourist Place: ட்ரெக்கிங் செல்ல ஏதுவாக சேலத்தில் இப்படி ஒரு இடமா..? களைக்கட்ட ஆரம்பிக்கும் சீசன் ..!

இது தவிர அங்குள்ள ஹோட்டல்கள், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைகளில் முடங்கியுள்ளனர். பார்படாஸில் 4ம் கட்ட சூறாவளி வீசி வந்தது.  மிக கடுமையான காற்றுடன் அதீத கனமழை பெய்து வருவதால் அடுத்த 24 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது.

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறுகையில்,  ”நாங்கள் அனைவரும் சூறாவளியில் சிக்கியிருப்பதகாவும்,  நிலைமை சீரான பிறகு நாடு திரும்பி இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும்” என்று கூறியிருந்தார்.  பார்படாஸ் விமான நிலையம் மூடபட்டுள்ள நிலையில், இந்திய வீரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்களை தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வர ஜெய்ஷா முடிவு செய்துளளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பார்பாடாஸ் விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் இன்று மாலை தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version