ZIM vs IND: ஜிம்பாவேவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு.. சுப்மன்கில் கேப்டனாக நியமனம்..!
ஜிம்பாவேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 போட்டிகளில் விளையாடும் சுப்மன் கில் தலைமையில் இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் விளையாடும் வீரர்களின் பெயரை பிசிசிஐ அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவுற்று சூப்பர் ஹிட் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஜிம்பாவே அணிக்கு எதிராக விளையாடும் ஐந்து டி 20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுப்மன்கில் தலைமையிலான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ருத்ராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்) , ஜுரல் ( விக்கெட் கீப்பர்) , நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலில் அகமது, முகில் அகமது ஆகியோர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் தொடரைவிட்டு முதல் அணியாக வெளியேறியது. இந்த ஐபிஎல் சீசனில் நன்றாக விளையாடிய பெரும்பாலான வீரர்களை ப்ளேயிங் லெவனில் எடுக்காமல், எந்த காரணத்திற்காக சுப்மன்கில்லை கேப்டனாக தேர்ந்தெடுத்தனர் என்று கிரிகெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Squad: Ꮪhubman Gill (Captain), Yashasvi Jaiswal, Ruturaj Gaikwad, Abhishek Sharma, Rinku Singh, Sanju Samson (WK), Dhruv Jurel (WK), Nitish Reddy, Riyan Parag, Washington Sundar, Ravi Bishnoi, Avesh Khan, Khaleel Ahmed, Mukesh Kumar, Tushar Deshpande.#TeamIndia | #ZIMvIND
— BCCI (@BCCI) June 24, 2024
கேப்டன்ஷிப்பில் நன்றாக செயல்பட்ட ருத்துராஜ், சஞ்சு சாம்சன் போன்றோர் அணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில், சுப்மன்கில் தேர்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே போல், தமிழக வீரர்களான நடராஜன், சாய் சுதர்சன் போன்றோர் கடந்த ஐபிஎல் சீசனில் நன்றாக விளையாடி நிறைய சாதனைகளை முறியடித்தனர். இவர்கள் டி20 உலக கோப்பை போட்டியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியிலும் இடம்பெறாது ரசிகர்களிடையே விமர்சனங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து தமிழக வீரர்களை பிசிசிஐ புறக்கணிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. வெங்கடேஷ் ஐயர், திலக் வர்மா, ரஜத் படிதர், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷித் ராணா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Watch Video : கேட்ச் பிடிக்கும் ஆர்வம்.. பலமாக மோதிக்கொண்ட தென் ஆப்பிரிக்க வீரர்கள்..!
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அறிமுக வீரர்களாக துஷார் தேஷ்பாண்டே, ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற சஞ்சு சாம்சனுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்காத நிலையில், இந்த ஜிம்பாவேவுக்கு எதிரான டி20 போட்டியில், இடம் கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.