Tiruchendur: செல்ஃபியால் வந்த வினை? – திருச்செந்தூர் யானை தாக்கியதன் பின்னணி!
கார்த்திகை மாதம் என்பதால் திருச்செந்தூர் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் அதன் பாகன் உதயன் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் 3.30 மணியளவில் இருவரும் யானைக்கு பழங்கள் கொடுத்துக்கொண்டிருந்த போது திடீரென ஆக்ரோஷத்துடன் யானை தாக்கியதாக சொல்லப்படுகிறது. பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருச்செந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகை மாதம் என்பதால் திருச்செந்தூர் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் யானை தாக்கியதில் பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Cinema: யூட்யூப் சேனல்களை உள்ளே விடாதீங்க..தியேட்டர்களுக்கு பறந்த உத்தரவு
தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உள்ளது. இந்த கோயிலில் 25 வயது மிக்க யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. தெய்வானை என பெயர் சூட்டப்பட்ட அந்த பெண் யானை கோயிலில் வரும் பக்தர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. கோயிலின் வடக்கு வாயில் வாயில் அருகே நின்று கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வரும் யானை இன்று வழக்கம்போல பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்தது. மதியம் 3.30 மணியளவில் யானை பாகன் மற்றும் அவரது உறவினரை யானை தாக்கியது.
இதனை சற்றும் எதிர்பாராத பக்தர்களும், கோவில் நிர்வாக அதிகாரிகளும் யானை தாக்கியதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உதயனும் உயிரிழந்தார். யானை திடீரென ஆக்ரோஷத்துடன் தாக்க என்ன காரணம் என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read: Local Holiday: குமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
பெண் யானை என்பதால் மதம் பிடித்திருக்க வாய்ப்பில்லை என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யானை சாந்தமாகியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து தெரிவிப்போம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோயில் வளாகத்தில் இத்தகைய சம்பவம் நடைபெற்றதால் திருச்செந்தூர் கோயில் நடை 40 நிமிடங்கள் மூடப்பட்டது. பின்னர் பரிகார பூஜைகள் எல்லாம் செய்யப்பட்டு பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இப்படியான நிலையில் யானை பாகன் உதயகுமாரின் உறவினரான சிசுபாலன் நீண்ட நேரமாக தெய்வானை யானை அருகே நின்று செல்பி எடுத்துள்ளார். செல்போனை கண்டு ஆத்திரம் அடைந்த யானை சிசுபாலனை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியதாக வனச்சரக அலுவலர் கவின் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இருவரையும் தாக்கிய பிறகு யானை உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதனை சாப்பிட வைக்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இப்படியான நிலையில் திருச்செந்தூர் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த யானை 6 வயதாக இருக்கும் போது அசாமில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்த கோயிலில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயகுமார் தான் இதனை பராமரித்து வருகிறார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொட்டகையில் கட்டப்பட்ட அந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.