Chidambaram Election Results 2024 : திருமாவளவன் வெற்றி.. சிதம்பரம் தொகுதி மக்களவை தேர்தல் 2024 முடிவுகள்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை தி.மு.க அ.தி.மு.க, பா.ம. க, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுகு வாக்குகள் அதிகளவில் உள்ளது. 1957 ஆண்டு முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடந்த முதலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சிதம்பரம் தொகுதி அதிகபட்சம் காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க 4 முறையும் , பா.ம.க 3 முறை வெற்றுள்ளன. அ.தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா இரண்டு முறை வென்றுள்ளது.
திருமாவளவன் வெற்றி : சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே வெற்றி பெற்று எம்பியாக இருக்கும் திருமாவளவன் இந்த தேர்தலிலும் போட்டியிட்டார். இந்தியா கூட்டணியில் இருக்கும் அவர் தமிழகத்தில் திமுகவுடன் கைகோர்த்து இந்த தேர்தலை சந்தித்தார். இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திருமாவளவன் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் 451178 வாக்குகள் பெற்று இந்த வெற்றியை தனதாக்கியுள்ளார். இரண்டாம் இடத்தில் அதிமுக வேட்பாளர் 340464 வாக்குகளை பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் திருமாவளவன் மீண்டும் எம்பியாகிறார். சிதம்பரம் தொகுதியைப் பொறுத்தவரை தமிழகத்தில் 27வது தொகுதியாக சிதம்பரம் மக்களவை தொகுதி அமைந்துள்ளது. சிதம்பரம் மக்களவை தொகுதியில் பட்டியல் இன சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த தொகுதி தனி தொகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அருகில் உள்ள பெரம்பலூர், அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 2 வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2024 தேர்தல் நிலவரம்
2024 ஆம் ஆண்டு சிதம்பரம் மக்களவை தொகுதியில், நான்கு முனைப்போட்டி நிலவியது. கடந்த தேர்தலில் வெற்றிபெற்று தற்போது எம்.பி.யாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக திருமாவளவன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக சந்திரஹாசனும், பா.ஜ.க சார்பாக கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஜான்சி ராணி போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சந்திரஹாசனுக்கும், திமுக கூட்டணியில் போட்டியிடும் தொல். திருமாவளவனுக்கும் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும், போட்டியாளர்களை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார் திருமா.
சிதம்பரம் மக்களவை தொகுதி
பட்டியலின மக்கள் மற்றும் வன்னியர் சமூக மக்களின் வாக்குகள் அதிக அளவில் உள்ளது. சிதம்பரம் மக்களவை தொகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இங்கு நெல், கரும்பு, முந்திரி, சோளம், பருத்தி, மிளகாய் ஆகிய பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன. அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளதால் சிமெண்ட் நகரம் என்றழைக்கப்படுகிறது. மேலும், இங்கு தனியார் கரும்பு ஆலைகளும் அதிகளவில் உள்ளன. இப்பகுதி மக்களும், இளைஞர்களும் இந்த சிமெண்ட் தொழிற்சாலைகளையும், கரும்பு ஆலைகளையும் நம்பியே உள்ளனர்.
Also Read: LS Exit Poll Results 2024 Highlights: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
சட்டப்பேரவை தொகுதிகள்
கடந்த 47 ஆண்டுகளில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு 13 எம்.பிக்கள் சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்ற தொகுதி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளியும், கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகுதிகளை இணைத்து தொகுதி மறுவரையறைக்கு பிறகு 2009ம் ஆண்டு சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.
வாக்காளர் எண்ணிக்கை
சிதம்பரம் மக்களவை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,10,915
ஆண் வாக்காளர்கள்: 7,49,623
பெண் வாக்காளர்கள்: 7,61,206
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 86
முந்தைய தேர்தல் முடிவுகள்:
கடந்த முறை தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 500,29 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4,97,010 வாக்குகள் பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் பி.சந்திரசேகர் இரண்டாம் இடம் பிடித்தார். சுயேச்சையாக போட்டியிட்ட அ. இளவரசன் 62,308 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.சிவஜோதி 37,471 வாக்குகளும், மக்கள் நீதிமையம் வேட்பாளர் டி.ரவி 15,334 வாக்குகளும் பெற்றனர்.
Also Read: Summer: கோடையில் எண்ணெய் வழியும் சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்..!