Crime: ஆளில்லா நேரத்தில் அத்துமீறல்.. இளம்பெண் அளித்த புகாரில் பிரபல பாடகர் கைது!
Singer GuruGuhan: குருகுகன் எனக்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் கடந்த மே மாதம் அறிமுகமானார். அறிமுகமான சில நாட்களிலேயே என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சம்மதம் கேட்டார். நான் அதற்கு எனது பெற்றோரிடம் வந்து பேசுமாறு தெரிவித்தேன். அதன்படி எனது பெற்றோரை வந்து குருகுகன் சந்தித்து பேசினார்.
இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த புகாரின் அடிப்படையில் பாடகர் குருகுகனை பரங்கிமலை போலீசார் கைது செய்துள்ளனர். சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் குரு குகன். 26 வயதான இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இசை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாடகராக பங்கேற்று தமிழகமெங்கும் பிரபலமானார். சென்னையில் வாரந்தோறும் நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மட்டுமல்லாது பல இசையமைப்பாளர்களின் லைவ் கான்செர்ட் இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இதனிடையே குருகுகன் இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் பின்னணி குறித்து பார்க்கலாம்.
Also Read: Tiruchendur: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு – பக்தர்கள் அதிர்ச்சி!
காதலிப்பது போல மோசடி
பாடகர் குருகுகன் மீது பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற வங்கி மேலாளரின் மகளான அப்பெண் அளித்த புகாரில் பல திடுக்கிடும் தகவல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, குருகுகன் எனக்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் கடந்த மே மாதம் அறிமுகமானார். அறிமுகமான சில நாட்களிலேயே என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சம்மதம் கேட்டார். நான் அதற்கு எனது பெற்றோரிடம் வந்து பேசுமாறு தெரிவித்தேன். அதன்படி எனது பெற்றோரை வந்து குருகுகன் சந்தித்து பேசினார்.
அப்போது என்னுடைய பெற்றோரிடம், உங்களது மகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்ற பாகுபாடெல்லாம் நான் பார்க்க மாட்டேன். அதனால் அவரை திருமணம் செய்து வைக்குமாறு தெரிவித்தார். இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் முதலில் நானும் உன் பெற்றோர் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தேன். ஆனால் குரு குகன் வீட்டில் ஒப்புக்கொள்ள விட்டாலும் நான் உன்னைத்தான் திருமணம் செய்வேன் என விடாப்படியாக இருந்தார். மேலும் வீட்டில் ஏற்கா விட்டால் நாம் தனி குடித்தனம் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Also Read: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொடூரமாக கொன்ற இளைஞர்.. அதிர்ச்சி காரணம்!
இதனைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் காதலர்களாக பழகி வந்தோம். இப்படியான நிலையில் உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என்னை ஒருநாள் சந்திக்க குருகுகன் வந்தான். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவன் என்னிடம் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டான்.
மேலும் இதுதொடர்பாக நான் கேட்டதற்கு நாம் இருவரும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி தன்னை சமாதானப்படுத்தினான் எனவும் அந்த இளம்பெண் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனது பெற்றோரை சம்மதிக்க வைக்க தாமதம் ஆகிறது என பல காரணங்களை கூறி வந்த பாடகர் குருகுகனிடம் நான் கருவுற்ற தகவலை தெரிவித்தேன். கருவுற்ற நிலையில் பதிவு திருமணம் செய்து கொள்ள குரு குகனை அழைத்தபோது அவர் சமாளித்து மறுத்து விட்டான். இதனைத் தொடர்ந்து வெளியே அழைத்து செல்வதாக கூறி கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தான். தற்போது திருமணம் செய்ய மறுக்கிறான் எனவும் அப்பெண் தெரிவித்திருந்தார்.
Also Read: Local Holiday: குமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
இது தொடர்பாக பரங்கிமலை காவல் நிலைய போலீசார் பாடகர் குருகுகன் மீது பொய்யான உத்தரவாதம் கொடுத்து பாலியல் உறவு வைத்துக் கொள்ளுதல், மிரட்டி அவமதித்து ஆதாரங்களை அழிப்பது, தாழ்த்தப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய மூன்று பிரிவுகள் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வருமாறு பாடகர் குருகுகனுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அவரது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெருங்குடி பகுதியில் தலைமறைவாக இருந்த பாடகர் குருகுகனை போலீசார் கைது செய்தனர். அவரை பின்னர் நீதிமன்றத்தில் சிறையில் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பிரபலமான நிலையில் இப்படி ஒரு காரியத்தை செய்த குருகுகனுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என போலீசாரை வலியுறுத்தியுள்ளனர்.