Local Holiday: குமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
Kanyakumari: உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்துக்கு கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது கேரளா எல்லைப்பகுதியில் வசித்து வரும் மக்களும் வருகை தந்து சிறப்பிப்பது வழக்கமாகும்.
உள்ளூர் விடுமுறை: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிப்பானது மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்துக்கு கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது கேரளா எல்லைப்பகுதியில் வசித்து வரும் மக்களும் வருகை தந்து சிறப்பிப்பது வழக்கமாகும்.
Also Read: Chennai: சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்.. மாநகராட்சி அதிரடி முடிவு!
புனித சவேரியார் ஆலயம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையப்பகுதியான கோட்டாறு பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. புனித சவேரியாருக்கென்று முதன்முதலாக உலக அளவில் எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன் திகழும் இந்த கோட்டாறு பேராலயம் சாதி சமய வேறுபாடுகள் இன்றி எல்லா மக்களும் நாடிவரும் இடமாக அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை 10 நாட்கள் புனித சவேரியார் பேராலய திருவிழா நடைபெறும்.
அதன்படி நடப்பாண்டு காண திருவிழா வரும் நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்குகிறது. இந்த விழாவின் ஒவ்வொரு நாளும் ஆடம்பர கூட்டு திருப்பலி, முதல் திருவீருத்து திருப்பலி, குணமளிக்கும் திருப்பலி, மாலையில் சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆசீர்வாதம், மலையாள திருப்பலி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். விழாவின் 10 ஆம் நாள் தேர் பவனி நடைபெறும்.
இந்த தேர் திருவிழாவில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் கலந்து கொள்வது வழக்கம். உள்ளூரைச் சேர்ந்த பிற மத மக்களும் கலந்து கொண்டு தேர் திருவிழாவை சிறப்பிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: மான்களை விரட்டிய இளைஞர்கள்.. ரூ.15,000 அபராதம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த வனத்துறை!
பிரபலமான பேராலயம்
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்த புனித சவேரியார் பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அவர் தங்கி வாழ்ந்தது கன்னியாகுமரி மாவட்டம் என சொல்லப்படுகிறது. அங்குள்ள கோட்டாரில் கி.பி. 1542 ஆம் ஆண்டு முதல் கி.பி. 1552 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் அவர் பணியாற்றியுள்ளார். டிசம்பர் 3 ஆம் தேதி இயற்கை எய்திய புனித சவேரியார் பணியாற்றிய இந்த சிறப்பு வாய்ந்த தேவாலயம் பிற்காலத்தில் பேராலயமாக தரம் உயர்த்தப்பட்டு பிரபலமானது.
சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் மிக முக்கிய இடத்தை இந்த பேராலயம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா நடைபெறும் நாள் அன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்த விழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி வழித்தடங்களில் செல்லும் அனைத்து பேருந்துகளும் மாற்று பாதையில் இயக்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.