Crime: விடிய விடிய பீர்.. வேளச்சேரி இளம்பெண் மரணத்தில் ட்விஸ்ட்!

Chennai: சென்னை வேளச்சேரியில் இருந்து தரமணி செல்லும் 100 அடி சாலையில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 60 வயது முதியவர் ஜோதி என்பவருடன் தங்கியிருந்த ரம்யா என்ற 27 வயது பெண் தான் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

Crime: விடிய விடிய பீர்.. வேளச்சேரி இளம்பெண் மரணத்தில் ட்விஸ்ட்!

கோப்பு புகைப்படம்

Published: 

26 Nov 2024 08:47 AM

சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதி அறையில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை வேளச்சேரியில் இருந்து தரமணி செல்லும் 100 அடி சாலையில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 60 வயது முதியவர் ஜோதி என்பவருடன் தங்கியிருந்த ரம்யா என்ற 27 வயது பெண் தான் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி காணலாம். நேற்று முன்தினம் (நவம்பர் 24) காலையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 60 வயது முதியவர் ஜோதி என்பவருடன் வந்த 27 வயது இளம்பெண் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஜோதி மற்றும் தனியார் விடுதி ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

Also Read: Udaipur: அரண்மனை வாரிசுகளுக்கு இடையே சண்டை.. ராஜஸ்தானில் பதற்றம்!

விடிய விடிய மது அருந்திய பெண்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. 60 வயதான இவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிகலா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சசிகலா உடல்நலக் குறைவால் இறந்துவிட்ட நிலையில் அவரின் இரண்டாவது மகள் தான் ரம்யா. இவர் கணவனைப் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்துள்ளார். அப்போது முதியவர் ஜோதியுடன் ரம்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அவ்வப்போது ஏதேனும் விடுதியில் அறை எடுத்து தங்குவது வழக்கம் என  சொல்லப்படுகிறது.

அந்த வகையில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) மாலை ஜோதி மற்றும் ரம்யா இருவரும் வேளச்சேரியில் இருந்து தரமணி செல்லும் 100 அடி சாலையில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். ரம்யாவுக்கு ஏற்கனவே மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளார். இதன் காரணமாக விடுதிக்கு வரும்போது 6 பீர் பாட்டில்கள் இருவரும் வாங்கி வந்துள்ளனர். அங்கு விடிய விடிய இருவரும் மது அருந்தியுள்ளனர்.

Also Read:Viral Video : சாலைகளில் பிச்சை எடுக்கும் இன்ஜினியர்.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ! 

இதற்கிடையில் அதிகாலை வரை 4 பீர் குடித்த ரம்யாவுக்கு நள்ளிரவு நேரத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஜோதியிடம் தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன அவர் டாக்டரிடம் செல்லலாம் எனக் கூறி ரம்யாவை அழைத்துள்ளார். ஆனால் அதனை மறுத்த ரம்யா தொடர்ந்து பீர் குடித்துக் கொண்டிருந்துள்ளார். மேலும் காலையில் குளித்துவிட்டு வந்த சிறிது மீண்டும் நெஞ்சு வலிப்பதாக கூறிய ரம்யா மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் ஜோதி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ‘டாஸ்மாக் செல்வேன், நான் குடிகாரன் இல்லை’: மது பிரியரின் வைரல் பேட்டி

இதற்கிடையில் ஜோதி கொடுத்த தகவல்படி விடுதி அருகில் மயங்கி கிடந்த ரம்யாவை ஊழியர்கள் உதவியுடன் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றதாகவும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாகவும் விடுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக  மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள வேளச்சேரி போலீசார் பிரேத பரிசோதனை அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை நடத்தலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரம்யா கொலை செய்யப்பட்டாரா அல்லது அளவுக்கதிகமான மது குடித்ததால் இறந்தாரா இல்லை வேறு எதுவும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். முதியவருடன் தங்கியிருந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
உருளைக்கிழங்கு இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்..!
பால் காஃபி அல்லது பிளாக் காஃபி... எது நல்லது?
நடிகை கயல் ஆனந்தியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்..!