5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cuddalore: ஒரே நேரத்தில் 15 மாத்திரைகள்.. சூப்பர்மேனாக மாற முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி!

குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள பெரிய கண்ணாடி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது மாணவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்தப் பள்ளியில் வியாழக்கிழமை தோறும் சத்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காலை அனைத்து மாணவர்களுக்கும் மாத்திரை தரப்பட்டுள்ளது.

Cuddalore: ஒரே நேரத்தில் 15 மாத்திரைகள்.. சூப்பர்மேனாக மாற முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 22 Nov 2024 17:38 PM

கடலூரில் ஒரே நேரத்தில் 15 சத்து மாத்திரங்களை சாப்பிட்ட பள்ளி மாணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் கடலூரில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை காணலாம். தமிழ்நாடு அரசால் பிறந்த குழந்தைகளுக்கும் இளம் பெண்களுக்கும் ரத்தசோகை பாதிப்பு ஏற்படாமல் இருக்க இரும்பு சத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படுகிறது. இந்திய நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேலானோர் ரத்த சோக நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

இதனை இளமையிலேயே சரி செய்யும் பொருட்டு பிறக்கப் போகும் குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் கர்ப்பிணிகளுக்கும், வளரும் குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் இரும்புச் சத்து மாத்திரைகள் வாரம் ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர்த்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 78 லட்சம் மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வாரத்திற்கு ஒன்று விதம் 52 வாரங்கள் விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த மாத்திரை வழங்குவதில் அவ்வப்போது எதிர்பாராத அசம்பாவிதங்களும் நிகழ்ந்துவிடுகிறது.

Also Read:Public Holiday: வார விடுமுறையில் வரும் பண்டிகைகள்.. 2025 ஆம் ஆண்டின் விடுமுறை நாட்கள் இதோ!

கடலூரை உலுக்கிய சம்பவம்

அந்த வகையில் கடலூரில் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. அங்குள்ள குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள பெரிய கண்ணாடி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது மாணவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்தப் பள்ளியில் வியாழக்கிழமை தோறும் சத்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காலை அனைத்து மாணவர்களுக்கும் மாத்திரை தரப்பட்டுள்ளது. பொதுவாக தங்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை சில மாணவர்கள் சாப்பிடாமல் அதனை எங்கேயாவது வீசிவிடுவது வழக்கமாக இருந்துள்ளது.

இப்படியாக இந்த பள்ளியில் மாத்திரை சாப்பிடாத மாணவர்கள் சிலர் தண்ணீர் குடிக்கும் இடத்தில் அதனை வைத்துவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த இடத்திற்கு வந்த 8 ஆம் வகுப்பு மாணவன் அங்கிருந்து ஏராளமான மாத்திரைகளை பார்த்திருக்கிறார்.சத்து மாத்திரை என்பதால் ஒரே நேரத்தில் நிறைய மாத்திரைகள் சாப்பிட்டால் சூப்பர் மேன் போல உடம்பில் பலம் அதிகரிக்கும் என நினைத்து மொத்தமாக 15 மாத்திரைகளையும் ஒரே நேரத்தில் அந்த மாணவன் சாப்பிட்டுள்ளான்.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் மாணவருக்கு வயிற்றுப்போக்கு கடுமையாக ஏற்பட்டுள்ளது. உடனடியாக பதறிப்போன மாணவன் வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். என்னவென்று விசாரித்த போது தான் மொத்தமாக சத்து மாத்திரை சாப்பிட்டதை கூறியிருக்கிறான். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர், மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து அந்த மாணவன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக மாணவனின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Also Read:Crime: திருச்சியை உலுக்கிய கொலை.. சினிமா பாணியில் சிக்கிய குடும்பம்.. என்ன நடந்தது?

விழிப்புணர்வு தேவை 

தமிழ்நாட்டில் உள்ள சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மாணவ மாணவர்களிடையே மாத்திரைகள் மற்றும் மருந்துகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் எந்தவித மருந்தையும் நாம் உட்கொள்ளக்கூடாது என்பதையும் பள்ளியிலே சொல்லிக் கொடுத்தால் கண்டிப்பாக அதன் பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே கடந்தாண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள காந்தள் பகுதியில் 8 ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை விழுங்கியதால்மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மாணவி ஒருவர் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த போது பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  மாணவ மாணவிகளிடையே யார் அதிக சத்து மாத்திரைகளை சாப்பிடுவது என்று போட்டி எழுந்ததன் விளைவாக ஒரு உயிர் பறிபோனது தான் மிச்சமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News