5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tiruchendur: பக்தர்களுக்கு திடீர் தடை.. திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு!

திருச்செந்தூர் முருகன் கோயில் பெண் யானையான தெய்வானை திடீரென  பாகன் மற்றும் அவரது உறவினர் ஒருவரை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக கோயிலில் பரிகார பூஜை மேற்கொள்ளப்பட்டது.

Tiruchendur: பக்தர்களுக்கு திடீர் தடை.. திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 Nov 2024 12:43 PM

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானைத் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் யானை குடில் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிலை சுற்றி தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் மற்றும் கோயில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே யானை நேற்று மதியம் முதல் உணவு எதுவும் சாப்பிடவில்லை என்றும், தண்ணீர் மற்றும் இலைகளை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வதாகவும் மற்றொரு பாகன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Also Read: Chennai MTC Bus: லக்கேஜூடன் பயணிக்கிறீர்களா? – சென்னை பேருந்துகளில் புதிய விதிகள் அமல்!

நடந்தது என்ன?

தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகனின் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார மக்களும் தங்கள் தினசரி பயன்பாட்டுக்காவும் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர். இதனால் வருடத்தின் 365 நாட்களும் திருச்செந்தூர் கோயில் பக்தர்கள் கூட்டத்தால் களைக்கட்டும்.

தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் நேற்று மதியம் திருச்செந்தூர் முருகன் கோயில் பெண் யானையான தெய்வானை திடீரென  பாகன் மற்றும் அவரது உறவினர் ஒருவரை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யானை குடில் இருக்கும் இடத்தில் மதியம் 3.30 மணி அளவில் இந்த சம்பவம் ஆனது நடைபெற்றது. பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் யானைக்கு உணவளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஆக்ரோஷமான யானை அவர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பாகம் உதயகுமார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

 Also Read: IRCTC: ரயில் உணவை சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழப்பா? – நடந்தது என்ன?

அடைக்கப்பட்ட கோயில் நடை

இதனால் திருச்செந்தூர் கோயில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. கோயில் நடை 40 நிமிடம் அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. யானை இருந்த சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த பொதுமக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். உடனடியாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. யானை திடீரென ஆக்ரோஷத்துடன் தாக்குவதற்கு என்ன காரணம் என்பது குறித்து வனத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் பெண் யானை என்பதால் அதற்கு கண்டிப்பாக மதம் பிடித்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் பாகன் உதயகுமாரின் உறவினரான சிசுபாலன் யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து அங்கிருந்து புறப்படும் போது யானையை தொட்டு சென்ற வருகிறேன் என சொல்லியதாக கூறப்படுகிறது. புதிதாக ஒருவர் தன்னை தொடுவதை உணர்ந்த யானை கோபத்தில் தனது கால் மற்றும் தும்பிக்கையால் சிசுபாலனை தாக்கி உள்ளது. அவரை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் தாக்கிய நிலையில் சிறிது நேரம் கழித்து அது பாகன் என்பதை அறிந்து யானை அவரை எழுப்ப முயன்றுள்ளது. அவர் எழுந்திருக்காததால் மீண்டும் ஆத்திரத்தில் சிசுபாலனை யானை கடுமையாக தாக்கியுள்ளதாக திருச்செந்தூர் வனச்சரக அலுவலரான கவின் தெரிவித்துள்ளார்.

பாகன் உதயகுமார்  இறந்ததை உணர்ந்த யானையை நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாமல் அமைதியாக இருந்து வருகிறது. மேலும் பாகனை நினைத்து யானை அழுததாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக யானை மட்டுமல்ல எந்த விலங்கை நாம் வளர்த்தாலும் அதன் சுபாவம் காரணமாக சில நேரங்களில் நம்மையே தாக்க சூழ்நிலை ஏற்படும் என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதன் காரணத்தை நம்மால் கண்டறிய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்

Latest News