5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kodaikkanal: கொடைக்கானலில் இந்த வாகனங்கள் வர திடீர் தடை.. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கொடைக்கானல் மலை வாசஸ்தலத்திற்கு வத்தலகுண்டு வழியாகவும், பழனி வழியாகவும் செல்லலாம். ஒரே நாளில் சுற்றிப் பார்க்கும் அளவுக்கு ஏரி, பூங்கா, குணா குகை, பைன் மரக்காடுகள், படகு குழாம் என பல வகையான இடங்கள் கொடைக்கானலில் உள்ளது. இந்த கொடைக்கானலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர்.

Kodaikkanal: கொடைக்கானலில் இந்த வாகனங்கள் வர திடீர் தடை.. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 12 Nov 2024 17:20 PM

கொடைக்கானல்: கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளம் உள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரில் வெளியான அறிவிப்பில், “திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரி ஆகியோரின் இசையுடன் பொதுநலன் கருதி அறிவிப்பு ஒன்று வெளியிடப்படுகிறது. அதாவது பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மட்டும் சரக்கு வாகனங்கள்) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கு செல்லும் மலைப்பாதையில் தொடக்கப்பள்ளியை தாண்டி செல்ல தடை விதித்து உத்தரப்படுகிறது.  இந்த உத்தரவானது நவம்பர் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: E- Pass: ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

மாவட்ட நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பு வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் சில்வர் ஃபால்ஸ் என அழைக்கப்படும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாகத்தான் மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாகன சோதனையின் போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததை தொடர்ந்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

தொடரும் நடவடிக்கைகள்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் கொடைக்கானல் மலையின் அடிவார பகுதியான காமக்காப்பட்டி, பழனி, சித்தரேவு, தர்மத்துப்பட்டி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் இணைந்து சோதனையில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் 9 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிகள் கொண்டு சென்றால் அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் உடனடியாக ரூபாய் 20000 அவதாரம் விதிக்கப்பட்டு வருகிறது.

Also Read: விருதுநகரில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்!

கொடைக்கானல் மலை

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கொடைக்கானல் மலை வாசஸ்தலத்திற்கு வத்தலகுண்டு வழியாகவும், பழனி வழியாகவும் செல்லலாம். ஒரே நாளில் சுற்றிப் பார்க்கும் அளவுக்கு ஏரி, பூங்கா, குணா குகை, பைன் மரக்காடுகள், படகு குழாம் என பல வகையான இடங்கள் கொடைக்கானலில் உள்ளது. இந்த கொடைக்கானலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். வார கடைசியிலும் விடுமுறை நாட்களிலும் இரண்டு மடங்கு கூட்டம் கொடைக்கானலை நோக்கி படையெடுக்கும் என்பதால் அங்கு எப்போது பார்த்தாலும் பிஸியாகவே இருக்கும். வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் கூட கிடைக்காத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.

கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ள கொடைக்கானல் பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். மதுரையில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடைக்கானல் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எதிர்காலத்தில் தேவையான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதன்படி கொடைக்கானலில் இ-பாஸ் முறை கட்டாயம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டும். எதிர்காலத்தில் சுற்றுலா இடங்களை மேம்படுத்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த உத்தரவு ஆனது பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையதளம் வாயிலாக இ-பாஸ் பெரும் வாகனங்கள் மட்டுமே கொடைக்கானலுக்கு இதுவரை அனுமதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Latest News