5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Electricity Bill: தமிழகத்தில் அடுத்த மாதம் உயரப்போகிறதா மின் கட்டணம்? பொதுமக்கள் அதிர்ச்சி..!

Electricity Board: தமிழகத்தில் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.

Electricity Bill: தமிழகத்தில் அடுத்த மாதம் உயரப்போகிறதா மின் கட்டணம்? பொதுமக்கள் அதிர்ச்சி..!
மின் கட்டணம்
intern
Tamil TV9 | Updated On: 07 Jun 2024 11:45 AM

தற்போதைய சூழலில், ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின்வாரியம் உள்ளது. இதன் காரணமாக, கடந்த 2022 ஆம் ஆண்டு மின்கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது, 2026-27 ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. மேலும், வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டிற்கு 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மின் கட்டணம் மீண்டும், இந்த ஆண்டும் 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Also Read:தேர்தலில் வென்ற கங்கனா ரனாவத்… மறைமுகமாக கலாய்த்த பிரபல நடிகை!

ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துக்கான பண வீக்க விகிதம் அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அள வுக்கு மின்கட்டணம் உயர்த்த வேண்டும் என்று விதிகள் உள்ளன.அதன்படி, நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 சதவீதம் அளவுக்கு மின்சா ரக்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: Tamilnadu Weather Alert: 8 மாவட்டங்களில் இன்று பிச்சு உதறும் கனமழை.. மக்களே அலர்ட்!

மின்சார கட்டணம் உயர்வு தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, தமிழக அரசு, மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக கையொப்பமிட்டிருப்பதால் 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப் பட வேண்டும். மேலும், வழக்கம்போல வாரியத்தின் வரவு, செலவு விவரங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம். இதுவரை எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழக அரசும் முடிவெடுக்கவில்லை’ என்று தெரிவித்தனர்.

Latest News