கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு - Tamil News | krishnagiri-issue-an-appeal-has-been-filed-in-the-madras-high-court-of-harassment-of-17-female-students-in-the-camp | TV9 Tamil

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Published: 

23 Aug 2024 16:47 PM

என்.சி.சி முகாமில் 8ஆம் வகுப்பு மாணவியை பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி முதல்வரிடம் கூற, அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தனது பெற்றோரிடம் மாணவி கூறினார்.

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

கோப்பு புகைப்படம்

Follow Us On

கிருஷ்ணகிரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாமில் 17 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படை முகாம் (என்.சி.சி) நடைபெற்றது. இந்த முகாமில் அப்பளியில் உள்ள பல மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கு கட்டடத்தில் தங்கி பயற்சி பெற்றிருக்கின்றனர். கடந்த 9 ம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது மாணவியை அதிகாலை 3 மணியளவில், தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில், என்.சி.சி முகாமில் 8ஆம் வகுப்பு மாணவியை பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி முதல்வரிடம் கூற, அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தனது பெற்றோரிடம் மாணவி கூறினார்.

மேலும் படிக்க: நாளை முதல் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.. கொண்டாட்டத்தில் மாணவர்கள்..!

இதனை அடுத்து, அவரது தாய் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பர்கூர் அனைத்து மகளிர் போலீசார், பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன், என்.சி.சி. பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி, சிவராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அனுமதி இல்லாமல் போலியாக என்.சி.சி முகாம் நடத்தியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திருப்பதியில் கிலோ கணக்கில் தங்கம் அணிந்து வந்து சாமி தரிசனம்.. பக்தர்களின் கவனத்தை ஈர்த்த குடும்பத்தினர்..

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவராமன், ஏற்கனவே எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் முறையிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Related Stories
Chennai Murder: மூளையை வறுத்து சாப்பிட்ட சைக்கோ கொலையாளி.. பெண் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் வாக்குமூலம்.. கலங்கிய போலீஸ்!
TN Goverment: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Weather Alert: சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 2 நாட்களுக்கு கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
ரூ.14,000 கடனை திருப்பி தராததால் ஆத்திரம்.. நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்.. பகீர் சம்பவம்!
TVK Conference : அக்டோபர் 27-ல் தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. அறிக்கையில் கூறியிருப்பது என்ன?
Armstrong Murder Case : ”ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு”.. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் பரபரப்பு கடிதம்!
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version