Lok shaba Election: விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் – பிரேமலதா வலியுறுத்தல்
விருதுநகரில் விஜயபிரபாகரன் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை, இது தமிழகத்தில் இருக்கும் அத்தனை மக்களுக்கும், ஊடகங்களை சேர்ந்தவருக்கும் இது தெரியும் என்று பிரேமலதா கூறினார். என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி அமைத்து ஒரு கோடி வாக்குகளுக்கு மேல் பெற்ற ஒரு சரித்திரத்தை படைத்திருக்கிறோம் இந்த கூட்டணியில் வெற்றிக்காக எங்களுக்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச்செயலாளருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் மற்றும் தேமுதிகவை சேர்ந்த அனைத்து மாவட்ட கழக செயலாளர் நிர்வாகிகள் தொண்டர்கள் கடைசி வரைக்கும் இந்த போரில் கொஞ்சம் கூட சோர்வடையாமல் வெற்றி வீரர்களாக களத்தில் இறங்கி போராடிய எங்கள் ஐந்து வேட்பாளர்களுக்கும் அதிமுகவை சேர்ந்த 35 வேட்பாளர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
கேப்டனுடைய ஆசீர்வாதத்துடன் இந்த கூட்டணி ஒரு நல்ல புரிதலோடு மக்களிடம் அமோகமான ஒரு வரவேற்பை பெற்றது. உங்கள் ஒரு நல்ல புரிதலோடு மக்களிடம் அமோகமான ஒரு வரவேற்பை பெற்றது என்பது உங்களுக்கு தெரியும் என்று கூறினார். மேலும் பேசிய அவர், இன்று தேசிய முற்போக்கு கழகத்தின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் சிறப்பாக பணியாற்றி நல்ல வாக்குகளை பெற்றிருக்கின்றனர். சென்னையில் பார்த்தசாரதி மட்டும் தான் குறைவான வாக்குகளை பெற்றார். ஆனால் திருவள்ளூரில் நல்லதம்பி, தஞ்சாவூரில் சிவனேசன், கடலூரில் சிவக்கொழுந்து, விருதுநகரில் விஜயபிரபாகர் நல்ல வாக்குகளை பெற்றிருந்தனர். குறிப்பாக விஜய பிரபாகர் களத்தில் வெற்றி வீரராக தன்னுடைய அத்தனை முயற்சிகளையும் எடுத்து கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதியாக நான் சொல்கிறேன் விஜய பிரபாகர் தோல்வி அடையவில்லை தோற்கடிக்கப்பட்டுள்ளார். வளர்ச்சியடையவில்லை வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை. இது அத்தனை மக்களுக்கும், அத்தனை ஊடகங்களை சேர்ந்தவருக்கும, தமிழகத்தில் இருக்கும் அத்தனை மக்களுக்கும் இது தெரியும் என்று பிரேமலதா கூறினார்.
Also Read:Narendra Modi : ஒருமனதாக தேர்வான நரேந்திர மோடி.. 8ம் தேதி பிரதமராக பதவியேற்பு என தகவல்
இன்றைக்கு விஜய பிரபாகர் முதன்முறையாக தேர்தல் களத்தில் சிறுவயதிலேயே நின்றுள்ளார். கேப்டன் இல்லாத கவலையை நாங்கள் மறக்கவில்லை அந்த சோகத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை, அவர் முதலில் நான் இந்த தேர்தலில் நிற்கவில்லை எனக்கு இன்னும் அப்பா நியாபகம் தான் இருக்கிறது என்று கூறினார். ஆனால், எங்களுடைய மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் நீங்கள் இந்த முறை போட்டியிட வேண்டும் அப்பா இல்லாத பொழுது விருதுநகரில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டதால் தான் அவர் போட்டியிட்டார். ஆனாலும் கடைசி வரைக்கும் அவர் தனது முயற்சியை யாரும் கைவிடவில்லை. விஜய பிரபாகர் ஏன் வீழ்த்தப்பட்டிருக்கிறார் என்பதற்கான சிறு விளக்கத்தை உங்களிடத்தில் கூறுகிறேன். அதே நேரத்தில் எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களித்த திருவள்ளூர், தஞ்சாவூர், கடலூர், மத்திய சென்னை, விருதுநகர் ஆகிய தொகுதிகளை சார்ந்த மக்களுக்கும் தேசிய முற்போக்கு கழகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்பதை ஏற்றுக் கொள்கிறோம் ஏற்றுக்கொள்கிறோம் எத்தனையோ தேர்தல்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம், இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல இனியும் இந்த கூட்டணியோடு தேசிய முற்போக்கு கழகம் வேறு நடை போடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏன் விஜய பிரபாகர் வீழ்த்தப்பட்டார் அதற்கான காரணத்தை நான் கூறுகிறேன் மொத்தம் விருதுநகர் தொகுதிகள் 10 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது அதில் விஜய பிரபாகர் பெற்றது 3 லட்சத்து 80 ஆயிரத்து 878 வாக்குகள். அவர் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 4379. மாணிக்கம் தாகூர் அவர்கள் 4379 இந்த வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் திருமங்கலம் சாத்தூர் சிவகாசி, விருதுநகர் அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் என மொத்தம் சேர்த்து இழந்தது 0.04% மட்டுமே அவர் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளில் பூட்டியிட்ட வேட்பாளர்கள் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இருக்கிறார்கள் அதே போல் விஜய பிரபாகர் அவர்களும் பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் நாங்கள் அந்த நிமிடமே அந்த தோல்வியை நாங்கள் மனதார ஏற்றுக்கொண்டு ஆமாம் தோல்வி என ஒப்புக்கொண்டு இருப்போம் ஆனால் இது திட்டமிடப்பட்டு விஜய பிரபாகர் அவர்கள் சூழ்ச்சியால் எழுதப்பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் எல்லாமே இருக்கிறது என்று கூறினார்.
Also Read: OPS: அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுக்க ஓபிஎஸ் அழைப்பு..!
வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக அங்கிருக்கும் அதிகாரிகளே சொல்கிறார்கள். அங்கு ஆட்சியர், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு மணிநேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துகிறார். வாக்கு எண்ணிக்கை ஏன் நிறுத்தப்பட்டது?. “பல்வேறு தரப்பிலும் இருந்து எனக்கு நிர்பந்தங்கள் அதிகமாக இருக்கிறது. என்னால் சமாளிக்க முடியவில்லை. போனை சுவிட்ச் ஆப் செய்யப்போகிறேன்” என்று கலெக்டர் வெளியே வந்து கூறுகிறார். அப்படியானால், ஆட்சியரை செயல்படவிடாமல் தடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் முடிவு அறிவிக்கும் முன்னதாகவே, முதல்வர் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது என்கிறார். முதல்வர் அறிவிக்கும் முன்னர் நான்கு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்துகொண்டு தான் இருந்தது. எதனை வைத்து முன்கூட்டியே வென்றுவிட்டோம் எனக் கூறினார் என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். முதல்வர் 40 தொகுதி என்று கூறியவுடன் அமைச்சர் பெருமக்கள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். விருதுநகர் தொகுதியில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தான் மாணிக்கம் தாக்கூர் அங்கு வெற்றிச் சான்றிதழை வாங்கினார். அப்படி இருக்கும்போது முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே வெற்றிபெற்றதாக அறிவித்தது எப்படி?.
கேடி ராஜேந்திர பாலாஜி தவறு நடப்பதாக அங்கேயே முறையிட்டார். தேமுதிக, அதிமுக நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என கோரினர். ஆனால், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மிரட்டும் தொனியில் போலீஸ் படையை இறக்கினர். இதனால் தான் விஜயபிரபாகாரன் தோல்வியில் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில்
முறையிட்டுள்ளோம்.” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.