5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OPS: அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுக்க ஓபிஎஸ் அழைப்பு..!

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், எதிர்பாராத அளவிற்கு மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி நிலையில், அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

OPS: அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுக்க ஓபிஎஸ் அழைப்பு..!
ஓபிஎஸ்
intern
Tamil TV9 | Updated On: 18 Nov 2024 18:59 PM

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், கடந்த 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோல்வியை சந்தித்தன. அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி சேர்ந்து, மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. அதிமுக நேரடியாக 32 இடங்களிலும், தேமுதிக 5 இடங்களிலும், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களில் அதிமுக சின்னத்திலேயே போட்டியிட்டன. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 32 இடங்களிலும் தோல்வியை தழுவியது.

Also Read: இது திராவிட மண்… இணையத்தை கலக்கும் திவ்யா சத்யராஜின் போஸ்ட்!

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டது. ஆனால், அதிமுகவில் இருந்து சென்ற டிடிவி மற்றும் ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றனர். இவ்வாறு அதிமுக 3 அணிகளாக பிரிந்து செயல்பட்டது தான் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: தமிழகத்தில் இன்றுடன் முடிவுக்கு வருகிறது தேர்தல் நடத்தை விதிகள்

கடந்த 2014 மக்களவை தேர்தலில் தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி என்ற பெருமையை பெற்றது. அந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் தனித்து 39 தொகுதியிலும் போட்டியிட்டது. அப்போது ஒரு கோடி 72 லட்சம் வாக்குகளுடன் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 44.92ஆக உயர்ந்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. குறிப்பாக சென்னை உள்ள மூன்று தொகுதிகளிலும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும், தென்சென்னை, வேலூர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7தொகுதிகளில் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Latest News