Chennai MTC Bus: லக்கேஜூடன் பயணிக்கிறீர்களா? – சென்னை பேருந்துகளில் புதிய விதிகள் அமல்!

சென்னையைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் எப்போதும் கூட்டம் அலைமோதும் நிலையில் லக்கேஜ் கொண்டு செல்வது தொடர்பாக பயணிகள், போக்குவரத்து ஊழியர்கள் இடையே வாக்குவாதம் தொடங்கி கைக்கலப்பு வரை சென்று விடுகிறது.

Chennai MTC Bus: லக்கேஜூடன் பயணிக்கிறீர்களா? - சென்னை பேருந்துகளில் புதிய விதிகள் அமல்!

கோப்பு புகைப்படம்

Published: 

19 Nov 2024 06:15 AM

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகளில்  பயணிகள் கொண்டுவரும் லக்கேஜூகளுக்கு புதிய விதிமுறையானது அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மினி, சாதாரண, விரைவு மற்றும் சொகுசு என 4 வகைகளில் பேருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய பேருந்துகளை நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய பேருந்துகளில் அவ்வப்போது லக்கேஜூகள் கொண்டு செல்வது தொடர்பாக பயணிகளுக்கும், பேருந்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இடையே பிரச்னை ஏற்படுவது வழக்கம். சமீபகாலமாக அதிகமாக லக்கேஜ் கொண்டு வரும் பயணிகளுக்கு பேருந்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இப்படியான நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Also Read: Tasmac: மக்கள் வேண்டாம் என்றால் டாஸ்மாக் கடை இருக்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னையைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் எப்போதும் கூட்டம் அலைமோதும் நிலையில் லக்கேஜ் கொண்டு செல்வது தொடர்பாக பயணிகள், போக்குவரத்து ஊழியர்கள் இடையே வாக்குவாதம் தொடங்கி கைக்கலப்பு வரை சென்று விடுகிறது. ஒருவேளை பயணிகளுக்கு லக்கேஜ் கட்டணம் பெறாவிட்டால் பேருந்தின் நடத்துநருக்கு மேலதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கும் நிலையும் உள்ளது. இதனை தவிர்க்கவே இத்தகைய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமலுக்கு வந்த புதிய விதிகள்

அதன்படி, “சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் நடத்துநருக்கும் இடையே சுமுகமான உறவை உறுதி செய்யும் முறையில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பயணிகள் தங்கள் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கான கட்டணம் குறித்து பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் புகார்கள் அடிப்படையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயக்கப்படும் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் நடத்துநர்கள் சுமை கட்டணம் வசூலிப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: Cinema: யூட்யூப் சேனல்களை உள்ளே விடாதீங்க..தியேட்டர்களுக்கு பறந்த உத்தரவு

  • பயணிகள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக தோள்களில் மாட்டி சொல்லக்கூடிய பைகள், கேமரா போன்ற கையடக்க சாதனங்கள், லேப்டாப் சிறிய அளவிலான கையில் எடுத்துச் செல்லத்தக்க மின்சாதன பொருட்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், கலை நிகழ்ச்சிக்கு செல்லும் நாட்டுப்புற கலைஞர்கள் எடுத்துச் செல்லும் வாத்திய கருவிகள், துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள் அல்லது பைகள் ஆகியவற்றை இலவசமாக ஏற்றி பயணம் செய்யலாம்.
  • அதே சமயம் பயணிகள் தங்களுடைய உடைமைகளை எடுத்துச் செல்லும் ட்ராலி வழியான சூட்கேஸ்களின் அளவு அதிகபட்சமாக 65 சென்டி மீட்டர் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • ஒரு பயணி மாநகர பேருந்துகளில் சொந்த உபயோகத்திற்காக  அதிகப்பட்சமாக 20 கிலோ எடைக்கொண்ட பொருள்களை கட்டணமின்றி எடுத்து சொல்லலாம்.
  • பேருந்துகளில் பயணிகள் எடுத்து வரும் 65 செ.மீ அளவுக்கு மேலுள்ள டிராலி வகையிலான சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவுக்கு மேல் எடையுள்ள பொருட்கள் அனைத்திற்கும் ஒரு பயணிக்கான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
  • அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கடத்தல் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல பேருந்துகளில் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது.
  • பேருந்துகளில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
  • மேலும் சக பயணிக்கும் பாதிக்கும் வகையிலான ஈரமான சுமைகளை ஏற்ற வேண்டாம்.
  • அதேபோல் பயணிகள் இல்லாத சுமைகளை எந்த காரணத்திற்காகவும் தனியாக அனுமதிக்க கூடாது.
  • செய்தித்தாள்கள் மற்றும் தபால் கொண்டு செல்வதற்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

அனைவருக்கும் அறிவுறுத்தல் 

சூட்கேஸ்கள் (ட்ராலி வகை) மற்றும் கட்டணங்கள் குறிக்க விளக்கத்தினை நடத்துநர்கள், போக்குவரத்துக் கழக மேலாளர்கள், ஆய்வாளர்கள், பயண சீட்டு பரிசோதகர்கள்,  நேரகாப்பாளர்கள் என அனைவருக்கும் விளக்கிக் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேளாலர்களுக்கும் மேலாண் இயக்குநர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை..!
ஆஸ்திரேலியாவில் கேப்டனாக அதிக சதம் அடித்த இந்தியர்..!
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமரும் வேலையா?