5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kongu Food Festival: ஆசை காட்டி மோசம்.. கொங்கு உணவு திருவிழாவில் குமுறிய மக்கள்!

Coimbatore: கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரர்ஸ் சங்கம் சார்பில் 2 நாட்கள் கொங்கு உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி சனிக்கிழமை மாலை இந்த நிகழ்ச்சியானது தொடங்கியது.

Kongu Food Festival: ஆசை காட்டி மோசம்.. கொங்கு உணவு திருவிழாவில் குமுறிய மக்கள்!
கொங்கு உணவு திருவிழா
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 02 Dec 2024 12:55 PM

கொங்கு உணவு திருவிழா: கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கொங்கு உணவு திருவிழாவில்  சரியாக ஏற்பாடு செய்யப்படாத நிலையில் அதில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சண்டைக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரர்ஸ் சங்கம் சார்பில் 2 நாட்கள் கொங்கு உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி சனிக்கிழமை மாலை இந்த நிகழ்ச்சியானது தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேட்டரிங் நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. இந்த உணவு திருவிழாவில் பங்கேற்க பல்வேறு விதமான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Also Read: H Raja: சிக்கிய ஹெச்.ராஜா.. 2 வழக்குகளில் தலா 6 மாத சிறை தண்டனை விதிப்பு!

இந்த உணவு திருவிழாவில் சைவம் மற்றும் அசைவம் என இரு வகையான உணவுகளும் பரிமாறப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் மற்றும் ஜூஸ் என சகலமும் நிறைந்திருந்ததால் உள்ளே நுழைந்து வந்த மக்கள் அனைத்து ஸ்டால்களையும் கண்டு முதலில் ஆச்சரியப்பட்டனர். புக் மை ஷோ செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் 400க்கும் மேற்பட்ட உணவு வகைகள் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதன்படி 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு ரூ.499, பெரியவர்களுக்கு ரூ.799, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டது. மேலும்  ஒரு நபர் டிக்கெட் வாங்கி உள்ளே வந்தால் எந்தவித கட்டுப்பாடு இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தெரிவித்து இருந்தனர். இதனால் இன்னைக்கு ஒரு புடி என கோவை மட்டுமல்லாமல் சுற்று மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் ஆர்வமுடன் கொங்கு உணவு திருவிழாவுக்கு வருகை தந்தனர்.

Also Read: Krishnagiri: திக்குமுக்காடும் கிருஷ்ணகிரி.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

இதனால் முதல் நாளை விட நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அலை மோதியது. ஆனால் உள்ளே வந்த மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அன்லிமிடெட் உணவு என்பதால் அனைத்து ஸ்டால்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் உணவு பரிமாறும் இடத்தில் பொதுமக்களிடையே மோதலும் ஏற்பட்டது. உணவை வாங்கும் அவசரத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் வயது வித்தியாசமில்லால் பெரியவர்கள், இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாமல் நிறைய ஸ்டால்களில் எதிர்பார்த்து சென்ற உணவுகள் இல்லை என கட்டணம் செலுத்தி உள்ளே சென்ற மக்கள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.  இதனால் அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும், ஸ்டால் வைத்து இருந்தவர்களிடமும் சரமாரியாக பொதுமக்கள் சண்டைக்கு சென்றனர். மேலும் குடும்பத்துடன் ஆசையாக பணம் கட்டி உணவு சாப்பிட வந்தவர்களை மணிக்கணக்கில் உணவுக்காக காத்திருக்க வைத்ததாகவும் புகார் தெரிவித்தனர்.

அசைவ உணவுகள் உள்ளிட்ட பாதி உணவுகள் சரியாக செய்யப்படாமலும், வேகாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 1000 பேர் மட்டுமே சாப்பிட வேண்டிய இடத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிகமான கூடியதால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.  மீது பொதுமக்கள் கடும் அதிர்ச்சியுடன் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்கள் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

பணம் வாங்கிவிட்டு ஏதேனும் கேள்வி கேட்டால் சரியாக பதில் அளிக்க மறுக்கிறார்கள், உணவை ஏதோ இலவசமாக பெற்றுக்கொள்ள வந்ததை போல் நடந்து கொள்கிறார்கள், இந்த பணத்தைக் கொண்டு நல்ல ஸ்டார் ஓட்டலில் குடும்பத்துடன் ருசியாக விருந்து சாப்பிட்டு இருக்கலாம் என வந்திருந்த பலரின் குமுறல்களாக இருந்தது.

நுழைவு கட்டணம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த நிலையில் முறையான ஏற்பாடுகள் கூட செய்யாமல் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் வீடியோ வெளியிட்டு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அளவுக்கு மோசமான உணவு திருவிழாவாக கொங்கு உணவு திருவிழா அமைந்துள்ளதாக சில கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest News