Shaktikanta Das: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆச்சு?
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சக்திகாந்த தாஸ்: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நெஞ்செரிச்சல் காரணமாக அவதிப்பட்டதால் சக்தி காந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சக்திகாந்த தாஸ் உடல் நலம் பற்றி கவலைப்படும் அளவுக்கு இல்லை எனவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி உர்ஜித் படேலுக்குப் பிறகு நியமிக்கப்பட்டவர் சக்தி காந்ததாஸ். ஒடிசாவில் பிறந்த சக்தி காந்த தாஸ், டெல்லி பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்படும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்று துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை முடித்தார். இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
1980 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார். சக்தி காந்த தாஸ் தமிழ்நாடு கேடரில் பணியாற்றினார். தமிழ்நாடு மாநில அரசின் வணிகவரி ஆணையர், தொழில்துறை முதன்மைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பின்னர் மத்திய அரசு சென்று சென்று நிதியமைச்சகத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றினார். இதற்கிடையில் 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியான (ஜிஎஸ்டி) போன்ற முக்கிய சீர்திருத்தங்களை பொருளாதார துறையில் அறிமுகப்படுத்துவதில் சக்தி காந்த தாஸ் முக்கிய பங்கு வகித்தார்.
அவர் மே 2017 ஆம் ஆண்டு பொருளாதார விவகார செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியின் மூலம் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு அவர் பொறுப்பேற்றார். திவால் குறியீடு மற்றும் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
Also Read: Personal Loan : குறைந்த வட்டியுடன் தனிநபர் கடன்.. இந்த வங்கிகளை செக் பன்ணுங்க!
இவரது பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. தற்போது 67 வயதாகவும் சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ளது. ஆனால் அந்தத் துறையில் திறம்பட பணியாற்றி வரும் அவரது பணிக்காலம் மீண்டும் நீட்டிக்க படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சக்தி காந்த தாஸ் தமிழ்நாட்டில் பணியாற்றிய போது அமெரிக்கா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக சர்ச்சையில் சிக்கினார். சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 100 ஏக்கர் நிலத்தை 1970 ஆம் ஆண்டு சொல்லப்பட்ட விலைக்கு 2007 இல் அமெரிக்க நிறுவனம் பெற்றது. இது அப்போது பொருளாதார விவகார செயலாளராக இருந்த சக்தி காந்த தாஸ் மீது விமர்சனம் எழுந்தது.
RBI Governor Shaktikanta Das was admitted to Apollo Hospitals last night due to acidity. He is doing fine and will be discharged shortly.
@DeccanHerald pic.twitter.com/JEAie1wERQ— Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப (@sivaetb) November 26, 2024
மேலும் சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக வருவதற்கு முன்னர் மத்தியிலிருந்த பாஜக அரசுக்கும் அப்போதைய முன்னாள் ஆளுநர்களான ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக புதிய ரிசர்வ் வங்கி ஆளுநர் மத்திய அரசுக்கு இணக்கமாக செல்ல வேண்டும் என்ற முடிவில் தேர்வு செய்யப்பட்டவர் தான் சக்தி காந்த தாஸ். தனது பணிக்காலத்தில் பேசுவதை விட செயலில் தனது வேலையை காட்டுவார். இதனால் அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல், சிறிய வங்கிகளில் ஏற்பட்ட நிர்வாக சிக்கல், பணம் வீக்கத்தை கட்டுக்குள் வைத்தது, வாராக்கடன் விவகாரம் போன்ற சவால்களை சக்தி காந்த தாஸ் திறம்பட கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது