5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: அதிகனமழையில் இருந்து தப்பிய சென்னை.. வெதர்மேன் சொன்ன தகவல் என்ன?

நேற்று பெய்த கனமழையில், திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் 300 மிமீ அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரெட்ஹில்ஸ் அருகில் 279 மி.மீ., வடசென்னையில் உள்ள இடையாஞ்சாவடியில் 260 மி.மீ., ஆவடியில் 255 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather Alert: அதிகனமழையில் இருந்து தப்பிய சென்னை.. வெதர்மேன் சொன்ன தகவல் என்ன?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 16 Oct 2024 08:46 AM

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கி.மீ தொலைவில் அதே பகுதியில் நேற்று, இரவு 11.30 மணி நிலவரப்படி மையம் கொண்டுள்ளது. மேலும் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 460 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 530 கி.மீ. நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை சென்னை அருகே புதுச்சேரி மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழை அதாவது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்று கடக்கும் பகுதி வடக்கே இருக்கும் என்பதால் சென்னைக்கு அதிகனமழை இருக்காது. சீரான மழையே இருக்கும். எதிர்ப்பார்த்த அளவு மழை பொழிவு இருக்காது. சமாளிக்கக்கூடிய அளவே மழை இருக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டதால் எதிர்ப்பார்த்தன் மழை இருக்காது எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.


நேற்று பெய்த கனமழையில், திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் 300 மிமீ அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரெட்ஹில்ஸ் அருகில் 279 மி.மீ., வடசென்னையில் உள்ள இடையாஞ்சாவடியில் 260 மி.மீ., ஆவடியில் 255 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மில்லிமீட்டரில்)

நுங்கம்பாக்கம் (சென்னை) 139.0, மீனம்பாக்கம் (சென்னை) 116.4, எண்ணூர் போர்ட் (சென்னை) 165.5, சென்னை 140.5, மீனம்பாக்கம் இஸ்ரோ (சென்னை) 115.0, ஜெயா பொறியியல் கல்லூரி (சென்னை) 97.5, விஐடி சென்னை (செங்கல்பட்டு) 80.0, மகாபலிபுரம் (செங்கல்பட்டு) 78.5, புழல் (திருவள்ளூர்) 179.0, ஹிந்துஸ்தான் யுனிவர்ஸ்டி (காஞ்சிபுரம்) 164.5, குட் வில் ஸ்கூல் வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 160.5, அண்னா பல்கலைக்கழகம் (சென்னை) 154.0, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 134.0, பள்ளிக்கரணை (சென்னை) 122.2,
எல்மோயிஸ் கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 105.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Also Read: கொட்டும் மழை.. 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

மேலும் இன்று, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Latest News