5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: வெளியே போறீங்களா? குடையுடன் போங்க மக்களே.. காலை 10 மணி வரை செம்ம மழை இருக்கு..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: வெளியே போறீங்களா? குடையுடன் போங்க மக்களே.. காலை 10 மணி வரை செம்ம மழை இருக்கு..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 26 Sep 2024 08:00 AM

சென்னையில் நேற்று மதியம் முதல் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், மாலை முதல் நகரின் அனேக பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பதிவானது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வழக்கத்தை விட மாறாக அதிகமாக பதிவாகி வருகிறது. செப்டம்பர் மாதத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இது எப்போதும் இல்லாதது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்றைய தினம் மதுரையில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மதுரை மட்டுமல்லாமல் சென்னை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்கள் மழை நோக்கி காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் நேற்று மதியம் முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பதிவானது. மாலை நேரம் முதல் நகரின் அனேக பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை கொட்டியது. இரவு முழுவது ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது. கடும் வெப்பநிலைக்கு மத்தியில் நல்ல மழை பதிவாகி இருப்பது மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. சென்னை மாநகரமே குளிர்ந்துள்ளது. சூடான வானிலை மாறி சில்லென மாறியுள்ளது. இந்த மழையானது இனி வரும் நாடகளில் தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பதிவானது.

Also Read: சென்னையில் இன்று 5 மணி நேர மின் தடை.. எங்கே தெரியுமா? லிஸ்ட் இதோ..

இது ஒரு பக்கம் இருக்க காலை 10 மணி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட கிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது முதல் மழை பெய்யத்தொடங்கியுள்ளது.

நேற்று பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்):

நுங்கம்பாக்கம் (சென்னை) 74.2, மீனம்பாக்கம் (சென்னை) 71.2, ஜெயா பொறியியல் கல்லூரி (சென்னை) 92.5, விஐடி (செங்கல்பட்டு) 60.5, எண்ணூர் போர்ட் (சென்னை) 54.0, குட் வில் பள்ளி வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 84.5, புழல் (திருவள்ளூர்) 73.5, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 73.0, ஹிந்துஸ்தான் யுனிவர்ஸ்டி (காஞ்சிபுரம்) 64.0, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 53.0, எல்மோயிஸ் கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 51.5, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) 43.0, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 42.0, பள்ளிக்கரணை (சென்னை) 40.5, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 39.5, சாய்ராம் கல்லூரி (செங்கல்பட்டு) 36.0 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

Also Read: கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை கருத்து.. ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? திருமாவளவன் சொன்ன பதில்!

மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest News